AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND U19 vs PAK U19: பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

ACC Mens U19 Asia Cup 2026 Final: 2026-ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பையில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தோல்வியின் விளிம்பில் இருந்த போட்டியில், மோஹித் உல்வா ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்று நாயகனாகத் திகழ்ந்தார்.

IND U19 vs PAK U19: பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!
Ind U19 Win
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 14 Nov 2026 18:58 PM IST

2026-ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பையில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தோல்வியின் விளிம்பில் இருந்த போட்டியில், மோஹித் உல்வா ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்று நாயகனாகத் திகழ்ந்தார்.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 337 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கான், அப்துல் காதிருடன் இரண்டாவது விக்கெட்டுக்கு 135 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சதம் அடித்தார். உஸ்மான் கான் 111 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரிகள் உட்பட 107 ரன்கள் எடுத்தார். காதிர் 54 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் அடித்து 80 ரன்கள் குவித்து அதிரடியாக விளையாடினார். நான்காவது இடத்தில் களமிறங்கிய பாகிஸ்தான் கேப்டன் ஃபர்ஹான் யூசுஃப், 60 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து அரைசதம் அடித்தார்.

இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய காவ்யா படேல், 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேலும், அவர் மட்டுமே தனது முழு 10 ஓவர்களையும் வீசி, 68 ரன்களை விட்டுக்கொடுத்தார். சிகுருபதி வெங்கடா தனது 5 ஓவர்களில் 40 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

Follow Us