6 அடி கழிவறை.. 5.5 அடி நபர்.. எப்படி தூக்கிட்டு தொங்கியிருக்க முடியும்.. மதுரை லாக்கப் மரணத்தில் வழக்கறிஞர் கேள்வி!
Checkanurani Custodial Death : மதுரை செக்கானூரணி காவல் நிலைய மரண சம்பவத்தில் 6 அடி இருக்கும் கழிவறையில் 5.5 அடி உயரமுள்ள நபர் எப்படி தூக்கிட்டு தொங்கியிருக்க முடியும், மண்டியிட்டு தொங்கியிருக்க முடியுமா என்று வழக்கறிஞர் கேள்வி எழுப்பி உள்ளார்.
தேனி மாவட்டம், தேவாரம் அருகே உள்ள அழகர் நாயக்கன்பட்டியில் வசித்து வந்தவர் பாலகிருஷ்ணன். இவர், மதுரையை சேர்ந்த நாகராஜ் என்ற ஏலக்காய் வியாபாரியிடம் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கடந்த நவம்பர் 3- ஆம் தேதி போடியில் இருந்து மதுரைக்கு ஏலக்காய் ஏற்றிக் கொண்டு பாலகிருஷ்ணன் லாரியில் சென்றுள்ளார். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் என்ற பகுதியில் லாரி மொத்தமும் தீயில் எரிந்து விட்டதாக கூறி நேற்று வெள்ளிக்கிழமை ( நவம்பர் 13- ஆம் தேதி) செக்கானூரணி காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்காக சென்றார். அப்போது, அவர் அளித்த புகாரில் சந்தேகம் இருப்பதாக கருதிய போலீசார் அவரை இரவு முழுவதும் காவல் நிலையத்திலேயே தங்க வைத்துள்ளனர்.
காவல் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்ட ஓட்டுநர்
காவல் ஆய்வாளர் அறையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஓட்டுநர் பாலகிருஷ்ணன் இன்று சனிக்கிழமை காலை காவல் நிலையத்தில் உள்ள கழிவறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கு, தான் அளித்த புகார் மூலம் தானே போலீசாரிடம் சிக்கி கொண்ட பயத்தில் அவரை தற்கொலை அவரே செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்வதற்காக வெளியே சென்றிருந்தபோது, அவர் இத்தகைய முடிவை எடுத்திருந்தார்.
மேலும் படிக்க: மதுரை தனிஷ்க் கடையில் 15 கிலோ நகை கொள்ளை.. இன்ஸ்டா பிரபலம் உள்பட இருவர் கைது!
5.5 அடி நபர்.. 6 அடி கழிவறை.. எப்படி தூக்கிட்டிருக்க முடியும்
இதனிடையே, பாலகிருஷ்ணன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி சுதா உறவினர்கள் ஈடுபட்டனர். இது தொடர்பாக பாலகிருஷ்ணன் தரப்பு வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் கூறுகையில், காவல் நிலையத்தில் ஆஜராக கோரி அவருக்கு எந்தவிதமான சம்மனும் அனுப்பப்படவில்லை. பாலகிருஷ்ணனை குற்றவாளியாக ஆக்க முயற்சி செய்துள்ளனர். சாதாரண பாத்ரூமில் தூக்கிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த பாத்ரூமின் உயரமே 6 அடிதான். பாலகிருஷ்ணன் 5.5 அடி உயரம் இருப்பார். அவர் எப்படி மண்டி போட்டு தூக்கில் தொங்கியிருக்க முடியும்.
லாக்கப் மரணத்தில் சிபிஐ விசாரணை தேவை
அரசு தூக்கத்தில் உள்ளது. விழிப்புணர்வுக்காக செயல்படவில்லை. புகார்தாரர் மீது வழக்குப்பதிவு செய்தால் எப்படி. அவர் மீது எஃப் ஐ ஆர் கூட பதிவு செய்யப்படவில்லை. சி. எஸ். ஆரும் வழங்கப்படவில்லை. எதற்காக அவரை அதிகாலை 3 மணி வரை காவலில் வைத்துள்ளனர். அதிகாலை வரை எதற்காக தகவல் தெரிவிக்கவில்லை. இதனை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும். எங்களுக்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: எஸ்.பி.வேலுமணி- கே.ஏ.செங்கோட்டையன் திடீர் சந்திப்பு.. நீண்ட நேரம் பேச்சு.. அதிமுகவில் அடுத்த பிரளயமா? பின்னணி என்ன!