முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான செல்வ வரி வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு
Jayalalithaa Wealth Tax Case Verdict : செல்வ வரி வழக்கில் இருந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டற்கு எதிராக வருமான வரித்துறை தொடர்ந்த வழக்குகளை, முதல்வர் ஜெயலலிதாவை வருமான வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயம் விடுவித்தது சரி தான் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை, நவம்பர் 14 : செல்வ வரி வழக்கில் இருந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டற்கு எதிராக வருமான வரித்துறை தொடர்ந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் பேசிய நீதிபதி வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் விடுவித்தது சரியே, மறைந்த முதல்வர் ஜெயலலிதா வீட்டில் சசிகலா உள்ளிட்டோர் வசித்த நிலையில் செல்வங்கள் யாருக்கு சொந்தம் என்பதை கண்டுபிடிக்கவில்லை. செல்வங்கள் யாருக்கு சொந்தம் என்பதை கண்டுபிடிக்காத நிலையில் வழக்கு தாக்கல் செய்தது தவறு என்று தெரிவித்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான செல்வ வரி வழக்கு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பல ஆண்டுகள் செல்வ வரி (wealth tax) கணக்கை தாக்கல் செய்யவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறையினர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை விசாரித்த வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், அவரை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது.
இதையும் படிக்க : மதுரை தனிஷ்க் கடையில் 15 கிலோ நகை கொள்ளை.. இன்ஸ்டா பிரபலம் உள்பட இருவர் கைது!




இந்த நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித் துறை சார்பில் கடந்த 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. இதனையடுத்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக மறைந்தார். அவரது மறைவுக்குப் பிறகு அவரது சட்டப்பூர்வ வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நவம்பர் 14, 2026 இன்று நீதிபதி அனிதா சுமந்த் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தீபக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுதர்சனம், ஆவணங்களை முறையாக ஆய்வு செய்த பிறகே தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளதால், வருமான வரித் துறையின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.
இதையும் படிக்க : வங்கக் கடல் புயல் சின்னம்.. தமிழகத்தை புரட்டி போடப்போகிறதா? களமிறங்கிய கடலோர காவல் படை!
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஜெயலலிதா வீட்டில் சசிகலா உள்ளிட்டோர் வசித்த நிலையில், இந்த செல்வங்கள் யாருக்கு சொந்தமானவை என்பதை வருமான வரித்துறை கண்டுபிடிக்க முடியாத நிலையில், ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தது தவறு எனவும், வருமான வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயம், அவரை விடுவித்து பிறப்பித்த உத்தரவு சரிதான் என்றும் கூறி, வருமான வரித்துறை தாக்கல் செய்திருந்த மூன்று மேல் முறையீட்டு வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும் நீதிபதி அளித்த தீர்ப்பில் செல்வ வரி வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டது சரியே என்றும் சென்னை உயர் நீதிமன்றம் செல்வ வரி வழக்கில் இருந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை வருமான வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயம் விடுவித்தது சரி தான் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.