வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. நவம்பர் 16-ல் புயலாக வலுப்பெற வாய்ப்பு..
Cyclone In Bay Of Bengal: தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அதே பகுதியில் நீடிக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 16-ஆம் தேதி மாலையில் தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக்கூடும்.
நவம்பர் 14, 2026: வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இது நவம்பர் 16-ஆம் தேதி மாலையில் புயலாக வலுப்பெறக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புயலாக வலுப்பெற வாய்ப்பு
Low Pressure Area Over Bay of Bengal Likely to Intensify into Cyclonic Storm by 16th November
#IMD #CycloneAlert #BayOfBengal #LowPressureArea #CyclonicStorm #Depression #WeatherUpdate #WeatherForecast #CycloneUpdate #SevereWeather #IndiaWeather #FishermenWarning #MeteorologicalDepartment #IMDWeather #WeatherNews #TropicalCyclone #AndamanSea
@moesgoi @airnewsalerts @DDNational @ndmaindia @ICRER_MHA
— India Meteorological Department (@Indiametdept) November 13, 2026
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நவம்பர் 14-ஆம் தேதி காலை 8.30 மணி நிலவரப்படி அதே பகுதியில் நீடிக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 16-ஆம் தேதி மாலையில் தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக்கூடும்.
மேலும் படிக்க: மேகதாது அணை விவகாரம்.. “அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்க”.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!!
பலத்த காற்று வீசும் எச்சரிக்கை
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நவம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், நவம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும். தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நவம்பர் 17-ஆம் தேதி முதல் மணிக்கு 60 முதல் 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். மத்திய வங்கக்கடல் பகுதியில் நவம்பர் 17 முதல் மணிக்கு 65 முதல் 75 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
கடல் பகுதிகளில் கடல் சீற்றம் அதிகரித்து காணப்படும் என்பதால், கடலுக்குச் சென்ற மீனவர்கள் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அந்தமான் கடல் பகுதியில் நவம்பர் 16-ஆம் தேதி வரையும், தென்கிழக்கு வங்கக்கடலில் நவம்பர் 17-ஆம் தேதி வரையும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நவம்பர் 15 முதல் 18-ஆம் தேதி வரையும், மத்திய வங்கக்கடலில் நவம்பர் 16 முதல் 19-ஆம் தேதி வரையும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.