மதுரையில் காவல் நிலைய மரணம்.. புகாரளிக்க வந்தவர் சடலமாக மீட்பு.. ஆய்வாளர் உட்பட காவலர்கள் அதிரடி சஸ்பெண்ட்.. சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!!
Madurai Chekanurani Custodial Death: மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் என்பவர் உயிரிழந்த விவகாரத்தில், ஆய்வாளர் மற்றும் பணியில் இருந்த காவலர்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இவ்வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
மதுரை, நவ.14: மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்திற்குள் புகாரளிக்கச் சென்ற நபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினரிடம் புகார் அளிக்கச் சென்ற ஒரு சாதாரணக் குடிமகன் காவல் நிலைய வளாகத்திற்குள்ளேயே உயிரிழந்திருப்பது சட்டம்-ஒழுங்கு மற்றும் காவல்துறைப் பாதுகாப்புக் குறித்த தீவிர கேள்விகளை எழுப்பியுள்ளது. இச்சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கைகள் தற்போது வெளியாகிச் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன.
இதையும் படிக்க: ஐ.டி ஊழியர்கள் தான் டார்கெட்.. டூரிஸ்ட் விசாவில் வந்து மெத்தம்பெட்டமைன் விற்பனை.. மகாபலிபுரத்தில் பதுங்கிய நைஜீரியர் மீண்டும் போலீஸ் கஸ்டடியில்!
புகார்தாரரான லாரி ஓட்டுநரின் பின்னணி:
தேனி மாவட்டம் டி. அழகர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் தனியார் டெலிவரி நிறுவனத்தின் சரக்கு வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த நவம்பர் 3ஆம் தேதியன்று தேனியிலிருந்து மதுரைக்கு வாளந்தூர் கண்மாய் பகுதி வழியாகப் பார்சல்களை ஏற்றிச் சென்றபோது இவரது லாரி மீது மர்ம நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி அவர் வாலந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், விசாரணைக்காகவும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்வதற்காகவும் பாலகிருஷ்ணன் செக்கானூரணி காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
கழிவறையில் சடலமாக மீட்பு:
செக்கானூரணி காவல் நிலைய ஆய்வாளரின் அறையில் காத்திருந்த பாலகிருஷ்ணன், திடீரெனக் காவல் நிலையத்திற்குள் உள்ள கழிவறைக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்ற நிலையில் மயக்கமடைந்து கிடந்ததை அறிந்த போலீசார், உடனடியாக அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். எனினும், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். புகார் அளிக்கச் சென்ற இடத்திலேயே புகார்தாரர் உயிரிழந்த இந்தச் சம்பவம் அவரது குடும்பத்தினரைக் கடுமையான துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிக்க: பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. நவீன வடிவமைப்புடன் களமிறங்கும் ‘ஹீரோ’ சைக்கிள்கள்.. அரசு எடுத்த அசத்தல் நடவடிக்கை!
சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்ட வழக்கு:
இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறை தரப்பில் உடனடியாகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. செக்கானூரணி காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் சம்பவத்தின் போது பணியில் இருந்த அனைத்துக் காவலர்களும் தற்காலிகமாகப் பணி நீக்கம் (Suspended) செய்யப்பட்டுள்ளனர். மேலும், இவ்வழக்கின் விசாரணையைத் துல்லியமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடத்துவதற்காகச் சிபிசிஐடி (CBCID) பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.