AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. நவீன வடிவமைப்புடன் களமிறங்கும் ‘ஹீரோ’ சைக்கிள்கள்.. அரசு எடுத்த அசத்தல் நடவடிக்கை!

Tamil Nadu free bicycle scheme students: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தில் இந்த கல்வி ஆண்டில் பல்வேறு நவீன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஹீரோ நிறுவனம் மூலம் மாணவர்களுக்கு ஹெல்மெட், வாட்டர் பாட்டில் மற்றும் ஸ்டீல் கேபிள் பூட்டு உள்ளிட்ட கூடுதல் வசதிகளுடன் புதிய வடிவமைப்பு சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. நவீன வடிவமைப்புடன் களமிறங்கும் ‘ஹீரோ’ சைக்கிள்கள்.. அரசு எடுத்த அசத்தல் நடவடிக்கை!
மாணவர்களுக்கு சைக்கிள்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 14 Nov 2026 09:48 AM IST

சென்னை, நவ.14: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்குப் பயனளிக்கும் வகையில் அரசு சார்பில் இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் மிகச் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த கல்வி ஆண்டுகளில் பாரம்பரிய ரோட்ஸ்டர் வகை சைக்கிள்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் மாணவ-மாணவிகளின் வசதியையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு பல புதிய மற்றும் நவீன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, புகழ்பெற்ற ‘ஹீரோ’ (Hero) நிறுவனத்தின் அதிநவீன வடிவமைப்புடன் கூடிய சைக்கிள்கள் இந்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படிக்க: மதுரை நகைக்கடை கொள்ளை.. ஹைதராபாத்திற்கு நீளும் காவல்துறை விசாரணை.. சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!

மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் பிரத்யேக நிறங்கள்:

இந்த ஆண்டு வழங்கப்பட உள்ள புதிய சைக்கிள்கள் மாணவ மற்றும் மாணவிகளின் விருப்பத்திற்கேற்ப பிரத்யேக நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, மாணவர்களுக்கு ‘ஆர்மி கிரீன் நிறத்திலும், மாணவிகளுக்கு ‘லிலாக் மிஸ்ட்’ (Lilac Mist) நிறத்திலும் சைக்கிள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும், மிகவும் உறுதியான பிரேம், முன்புறம் மற்றும் பின்புறம் காலிபர் பிரேக்குகள் (Caliper Brakes), அகலமான டயர்கள் மற்றும் மென்மையான இருக்கை உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு மாணவருக்கும் ஐ.எஸ்.ஐ. (ISI) தரம் பெற்ற ஹெல்மெட், 750 மி.லி. கொள்ளளவு கொண்ட பிபிஏ (BPA) இல்லாத குடிநீர் பாட்டில், அதற்கான ஹோல்டர் மற்றும் திருட்டைத் தடுக்கும் அதிநவீன ஸ்டீல் கேபிள் பூட்டு ஆகியவையும் இலவசமாக வழங்கப்பட உள்ளன.

உத்தரவாதக் காலம் உயர்வு மற்றும் விலை நிர்ணயம்:

மாணவர்களின் நலனை முன்னிறுத்திச் சைக்கிள்களுக்கான உத்தரவாதக் காலமும் கடந்த ஆண்டுகளில் இருந்ததை விட உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு 3 ஆண்டுகளாக இருந்த உத்தரவாதக் காலம் தற்போது முழுமையாக 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, கூடுதல் வசதிகளுடன் மாணவர்களுக்கான இறுதி விலை ரூ.5,260 ஆகவும், மாணவிகளுக்கான இறுதி விலை ரூ.5,130 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விலை சற்று மாற்றமடைந்திருந்தாலும், மாணவர்களுக்குத் தேவையான அனைத்து பாதுகாப்பு மற்றும் அவசியமான உபகரணங்களும் இதில் முழுமையாகச் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : 64 சிம் கார்டுகள் பொருத்தக்கூடிய வசதி – நிதி மோசடி முதல் ஆபாச படங்கள் வரை… சென்னையில் செயல்பட்டு வந்த நெட்வொர்க்

ஒட்டுமொத்தப் பயனாளிகள், பெருமளவு நிதி சேமிப்பு

நடப்பு கல்வி ஆண்டுத் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் மொத்தம் 5,32,388 பள்ளி மாணவர்களுக்கு இந்த இலவச நவீன சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கான ஏலத் தொகையில் அரசின் முறையான பேச்சுவார்த்தை மற்றும் நடவடிக்கைகள் மூலம் முந்தைய மதிப்பீடான ரூ.392.32 கோடியிலிருந்து ரூ.276.20 கோடியாகக் குறைக்கப்பட்டு, அரசின் பொது நிதியில் சுமார் 29.6 சதவீதம் செலவு வெற்றிகரமாகக் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழை எளிய மாணவர்களின் கல்விப் பயணத்தை எளிதாக்கும் இந்தத் திட்டம் மாணவர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us