AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வங்கக்கடலில் உருவாகும் ‘அக்வான்’ புயல்.. சென்னை முதல் நெல்லூர் வரை கரையை கடக்க வாய்ப்பா? ஹேமச்சந்திரன் கணிப்பு!

Rainfall Alert: தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் வெளியிட்டுள்ள கணிப்பின்படி, வங்கக்கடலில் உருவாகக்கூடிய இந்தப் புயல் வட தமிழகத்தை நோக்கி நகர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நவம்பர் 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை வட கடலோர தமிழகத்திற்கு நல்ல மழைப்பொழிவை அளிக்கக்கூடிய புயலாக இது அமையலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வங்கக்கடலில் உருவாகும் ‘அக்வான்’ புயல்.. சென்னை முதல் நெல்லூர் வரை கரையை கடக்க வாய்ப்பா? ஹேமச்சந்திரன் கணிப்பு!
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 14 Nov 2026 07:28 AM IST

நவம்பர் 14, 2026: வங்கக்கடலில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் நவம்பர் 15ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதன்பிறகு புயலாகவும் வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயல் வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து சென்னை முதல் நெல்லூர் வரையிலான கடலோரப் பகுதிகளில் மழைப்பொழிவை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகும் புயல்:

தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து அதே பகுதியில் நீடித்து வருகிறது. இதனுடன் தொடர்புடைய வளிமண்டல சுழற்சி கடல் மட்டத்திலிருந்து சுமார் 5.8 கிலோமீட்டர் உயரம் வரை விரிவடைந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து முதலில் வலுப்பெறக்கூடும். பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், தொடர்ந்து புயலாகவும் மாறுவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மதுரை நகைக்கடை கொள்ளை.. ஹைதராபாத்திற்கு நீளும் காவல்துறை விசாரணை.. சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!

இந்த வடகிழக்கு பருவமழைக் காலத்தில் வங்கக்கடலில் உருவாகும் மூன்றாவது புயலாக இது அமையக்கூடும். ஏற்கனவே உருவான இரண்டு புயல்களும் ஆந்திர மாநிலத்தை நோக்கி நகர்ந்த நிலையில், தற்போது உருவாகி வரும் புயல் தமிழகத்தை நோக்கி நகருமா அல்லது ஆந்திராவை நோக்கிச் செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வட தமிழகத்தை நோக்கி நகருமா?

இதற்கிடையே, தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் வெளியிட்டுள்ள கணிப்பின்படி, வங்கக்கடலில் உருவாகக்கூடிய இந்தப் புயல் வட தமிழகத்தை நோக்கி நகர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நவம்பர் 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை வட கடலோர தமிழகத்திற்கு நல்ல மழைப்பொழிவை அளிக்கக்கூடிய புயலாக இது அமையலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வட கடலோர தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரப் பகுதிகளை நோக்கி இந்தப் புயல் நகர்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், புதுச்சேரி, சென்னை அல்லது நெல்லூர் இடையே ஏதேனும் ஒரு பகுதியில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் கணித்துள்ளார்.

மேலும் படிக்க: வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல்.. தமிழகத்தில் நவம்பர் 17, 18ல் கனமழைக்கு வாய்ப்பு?

இருப்பினும், இந்தக் கணிப்பு இன்னும் உறுதி செய்யப்படவில்லை. காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதன் நகர்வு மற்றும் தீவிரம் குறித்து தெளிவான தகவல்கள் கிடைத்த பின்னரே புயலின் பாதையை உறுதியாகக் கணிக்க முடியும். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தற்போதைய கணிப்பிலும் புயல் உருவாகும் சாத்தியம் தெரிவிக்கப்பட்டுள்ளதே தவிர, கரையை கடக்கும் இடம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

வட தமிழகத்தில் மழை அதிகரிக்குமா?

கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. ஆனால் வட கடலோர தமிழகத்தைப் பொறுத்தவரையில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. அவ்வப்போது மேகக்கூட்டங்கள் காரணமாக சில இடங்களில் மட்டும் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

இந்தச் சூழலில், வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல் வட தமிழகத்தை நோக்கி நகர்ந்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் மழைப்பொழிவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதற்கிடையே, வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Follow Us