கந்த சஷ்டி விழா.. சென்னை – திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்!
Southern Railway Kanda Sashti Special Trains | திருச்செந்தூரில் ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு கந்த சஷ்டி விழாவுக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, நவம்பர் 14 : கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், சிறப்பு ரயில்களை (Special Trains) இயக்க தெற்கு ரயில்வே (Southern Railway) திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னை மற்றும் திருச்செந்தூர் (Chennai and Tiruchendur) இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த நிலையில், கந்த சஷ்டியை முன்னிட்டு தெற்கு ரயில்வே இயக்கும் சிறப்பு ரயில்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை எழும்பூரில் இருந்து இயக்கப்படும் ரயில்
சென்னை எழும்பூரில் இருந்து இன்று (நவம்பர் 14, 2026) அன்று மாலை 4.10 மணிக்கு புறப்படும் இந்த ரயில், திருச்சிக்கு 9.25 மணிக்கு வந்தடையும். அதன் பிறகு 9.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும்.
திருச்செந்தூர் முதல் சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும் ரயில்
மறுமார்க்கமாக திருச்செந்தூர் முதல் சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும் ரயில் திருச்செந்தூரில் இருந்து நாளை (நவம்பர் 15, 2026) இரவு 10.30 மணிக்கு ஒருவழி சிறப்பு அதிவிரைவு ரயிலாக புறப்படும். இந்த ரயில் திருச்சிக்கு மறுநாள் காலை 6 மணிக்கு வந்து, மீண்டும் 6.05 மணிக்கு புறப்படும். பிறகு மதியம் 12 மணிக்கு சென்னை சென்றடையும்.




இதையும் படிங்க : தனி ரூட்டில் ஸ்ரீ காந்திமதி.. ராமதாஸ் பாதையில் புது அரசியல் இயக்கம்? டிசம்பரில் வெளியாகிறது அறிவிப்பு!
திருநெல்வேலி – தாம்பரம் இடையே இயக்கப்படும் ரயில்
இதேபோல திருநெல்வேலி மற்றும் தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதாவது, திருநெல்வேலியில் இருந்து நாளை (நவம்பர் 15, 2026) இரவு 11 மணிக்கு புறப்பட்டு மறுநாள் திருச்சிக்கு அதிகாலை 3.45 மணிக்கு சென்றடையும். அதன் பிறகு 3.50 மணிக்கு புறப்பட்டு காலை 9.55 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
இதையும் படிங்க : மேகதாது அணை கட்டுவதை யாரும் தடுக்க முடியாது – பிரதமர் முன்னிலையில் கர்நாடக முதல்வர் பேச்சு
தாம்பரம் – திருநெல்வேலி இடையே இயக்கப்படும் ரயில்
மறுமார்க்கமாக தாம்பரம் – திருநெல்வேலி இடையே ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதாவது, தாம்பரத்தில் இருந்து நவம்பர் 16, 2026 அன்று மதியம் 12.45 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு மாலை 5.15 மணிக்கு வந்தடையும். பிறகு 5.20 மணிக்கு புறப்பட்டு இரவு 11.40-க்கு திருநெல்வேலி சென்றடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
திருசெந்தூரில் கந்த சஷ்டி விழா கோலாகலமாக நடைபெறும். இதனை காண தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான மக்கள் திருச்செந்தூரில் குவியும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக சீரான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில், தெற்கு ரயில்வே இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.