திமுகவுக்கு மேலும் ஒரு நெருக்கடி.. நெடுஞ்சாலை துறையில் ரூ.2200 கோடி ஊழல்.. எ.வ.வேலு தலையில் இடியை இறக்கிய ஆதவ் அர்ஜூனா!
Highways Department Rs.2200 Crore Scam : திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறையில் ரூ. 2200 கோடி ஊழல் நிகழ்ந்துள்ளதாக பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பெரும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக ஆட்சியில் திருவான்மியூர்- உத்தண்டி திட்டத்தில் ரூ. 2200 கோடி ஊழல் நடந்துள்ளதாக பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெரும் குற்றசாட்டை முன்வைத்துள்ளார். பொதுப்பணித்துறையின் கீழ் 6 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த திமுக ஆட்சியில் திருவான்மியூர்- உத்தண்டி வரையிலான மேம்பால சாலை அமைப்பதற்கு டெண்டர் விடுக்கப்பட்டிருந்தது. தற்போது, தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்த நிலையில், அந்த டெண்டரில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக குற்றஞ்சாட்டி டெண்டர் ரத்து செய்யப்பட்டது. திமுக ஆட்சியில் பெயரளவுக்கு மட்டுமே ஆன்லைன் டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்களின் பினாமி நிறுவனங்கள் அதிக அளவிலான டெண்டர்களை எடுத்துள்ளது.
ஊழல் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையில் புகார்
இது தொடர்பாக தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துறையில் புகார் அளித்துள்ளோம். இனி வரும் காலங்களில் ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் இருக்காது. அனைத்தையும் மக்கள் பார்வைக்கு, மக்கள் மன்றத்துக்கு கொண்டு வருவோம். கடந்த நிதி நிலை அறிக்கை கூட்டத்தொடரின் போது, திருவான்மியூர்- உத்தண்டி மேம்பாலம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை. தற்போது, அந்தத் திட்டம் தொடர்பாக தீவிர ஆய்வு செய்து வருகிறோம். திருவான்மியூர்- உத்தண்டி மேம்பால திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. தமிழகம் அனைத்து துறைகளிலும் சரியாக இருக்கிறது என்று சொல்லக் கூடிய போலியான அரசு தவெக அரசு கிடையாது.
மேலும் படிக்க: கிருஷ்ணகிரியில் பரபரப்பு.. பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட தொழிலாளர்கள்.. 13 பேர் மருத்துவமனையில் அனுமதி!




அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் இல்லை
மருத்துவமனைகளில் சரியான பராமரிப்பு இல்லாமல் உள்ளது. மின்சார வசதி, தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. ஆனால், முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான தனியார் மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் உள்ளது. எதிர்வரும் 2 ஆண்டுகளில் பள்ளிகள், சமூக நீதி விடுதிகள், மருத்துவமனைகள் என அனைத்தும் சரிசெய்ய உள்ளம். எந்த இடத்தில் எல்லாம் கட்டடங்கள் இடிந்து சேதமடைந்த நிலையில் விழும் அளவுக்கு இருக்கிறதோ, அங்கெல்லாம் அதிகாரிகள் மூலமாக சிவப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டுமாரு அறிவுறுத்தி உள்ளோம்.
நெடுஞ்சாலைத்துறையில் ரூ.2200 கோடி ஊழல்
தேர்தல் நடைபெறுவதற்கு ஓராண்டுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறையில் சாலை பள்ளங்களை பேட்ச் வொர்க் பணிகளுக்காக ரூ.2200 கோடி ஊழல் செய்துள்ளனர். அரசுத்துறை சார்ந்த டெண்டர்களில் வெளிப்படைத்தன்மை கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் அமைச்சர்களின் பினாமி நிறுவனங்கள் நிறைய டெண்டர்களை எடுத்துள்ளது தொடர்பாக புகார் அளித்துள்ளோம். ஒரு திட்டம் தொடங்கப்படும் போது, குறிப்பிட்ட காலத்தில் முடிக்காத டெண்டர் நிறுவனங்களை கருப்பு பட்டியலில் வைக்க உள்ளோம். அவர்கள் டெண்டரில் பங்கேற்க முடியாது என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: காக்கிச் சட்டை கனவு நனவாகிறது.. தமிழக காவல்துறையில் 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப உத்தரவு.. முதல்வர் விஜய் அறிவிப்பு!