AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கதவும் உடைக்கல.. லாக்கரும் உடைக்கல.. ஆனா 50 பவுன் நகை மாயம்.. நாகர்கோவில் கூட்டுறவு வங்கியில் என்ன நடந்தது!

Nagercoil 50 Sovereign Gold Missing : கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 50 பவுன் தங்க நகை மாயமானது தொடர்பாக அதன் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கதவும் உடைக்கல.. லாக்கரும் உடைக்கல.. ஆனா 50 பவுன் நகை மாயம்.. நாகர்கோவில் கூட்டுறவு வங்கியில் என்ன நடந்தது!
நகை மாயம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 13 Nov 2026 15:33 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் லாக்கரில் இருந்த 50 பவுன் தங்க நகைகள் மாயமாகி உள்ளது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள கீழ ராமன்புதூர் பகுதியில் வசித்து வருபவர் ஜெபி பிரியங்கா ( 29 வயது). இவர், மறவன் குடியிருப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உள்ள லாக்கரில் கடந்த செப்டம்பர் 15- ஆம் தேதி தனது 50 பவுன் தங்க நகைகளை வைத்திருந்தார். இந்த நிலையில், கடந்த நவம்பர் 7- ஆம் தேதி நகைகளை எடுப்பதற்காக தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு நேரில் சென்றார். அப்போது, தனது லாக்கரை திறந்து பார்த்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த 50 பவுன் நகைகளும் மாயமாகி இருந்ததுடன், வெற்று லாக்கராக காட்சியளித்தது.

கூட்டுறவு கடன் சங்கத்தில் 50 பவுன் நகை மாயம்

இதைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்த ஜெபி பிரியங்கா இது தொடர்பாக கூட்டுறவு கடன் சங்கத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களிடம் கேள்வி எழுப்பினார். அப்போது, அவர்கள் லாக்கரில் நகைகள் பாதுகாப்பாகவே இருக்கும். ஆனால், உங்களது 50 பவுன் நகை மாயமாக இருப்பதாக கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, கோட்டார் காவல் நிலையத்தில் ஜெபி பிரியங்கா புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: ரூ.1000 கமிஷன் தருவதாக ஆசை வார்த்தை.. மாணவர்கள் ஆதார் மூலம் ரூ.70 கோடி கடன் மோசடி.. சேலத்தில் பெண் உள்பட இருவருக்கு காப்பு!

சங்கத்தின் கேமரா பதிவுகள் மாயம்- போலீசார் சந்தேகம்

இதனிடையே, மறவன் குடியிருப்பு தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்வதற்காக போலீசார் சென்ற நிலையில், கேமரா பதிவுகள் மாயமாகி இருந்தது. அத்துடன், கடன் சங்கத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அத்துடன், கூட்டுறவு கடன் சங்கத்தில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் கூட்டுறவு கடன் சங்கத்தின் கதவின் பூட்டுகள் மற்றும் லாக்கர்கள் உடைக்கப் படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், வெளி நபர்கள் யாரும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை என்று போலீசார் கருதுகின்றனர்.

கொள்ளை சம்பவத்தில் கடன் சங்க ஊழியர்கள் தொடர்பு

அதே வேளையில், மறவன் குடியிருப்பு தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களில் யாரோ ஒருவர் இத்தகைய செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்றும், கடன் சங்கத்தின் லாக்கர் மற்றும் சாவி ஆகியவை குறித்த விவரம் அறிந்த ஊழியர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: தமிழகத்தில் மீண்டும் பரபரப்பு.. போலீஸுக்கு தண்ணி காட்டிய தண்டனை கைதி.. மதுரை நீதிமன்றத்தில் இருந்து தப்பியோட்டம்!

Follow Us