தமிழகத்தில் மீண்டும் பரபரப்பு.. போலீஸுக்கு தண்ணி காட்டிய தண்டனை கைதி.. மதுரை நீதிமன்றத்தில் இருந்து தப்பியோட்டம்!
Madurai Prisoner Escaped : மதுரை மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் கைதான தண்டனை கைதி போதை தடுப்பு சிற ப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, போலீஸ் பாதுகாப்பில் இருந்து தப்பி ஓடினார். இந்தச் சம்பவம் பெரு ம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
தமிழகத்தில் கைதிகள் தப்பி செல்லும் சம்பவம் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் நீதிமன்றத்தில் இருந்து தண்டனை கைதி தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை அருகே உள்ள செம்மலை பகுதியில் வசித்து வருபவர் ராஜா. இவர், கஞ்சா வைத்திருந்ததாக போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். இந்த நிலையில், இன்று வியாழக்கிழமை ( நவம்பர் 12- ஆம் தேதி) கைதி ராஜாவை சிறையில் இருந்து மதுரை மாவட்ட போதை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக போலீசார் அழைத்து சென்றனர். அவரை, நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்திய நிலையில், 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த ராஜாவை குற்றவாளி என்று நீதிபதி அறிவித்து தண்டனை விவரங்களை தெரிவித்தார்.
நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடிய தண்டனை கைதி
தீர்ப்பு வந்த நிலையில், நீதிமன்றத்தில் போலீசார் பாதுகாப்பில் இருந்த தண்டனைக் கைதி ராஜா திடீரென அங்கு இருந்து தப்பி ஓடினார். இதனால், நீதிமன்ற வளாக பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே, உஷாரான போலீசார் தப்பி ஓடிய கைதியை பிடிப்பதற்காக விரைந்து ஓடினர். ஆனால், கண் இமைக்கும் நேரத்தில் தண்டனை கைதி ராஜா தப்பி ஓடி மறைந்து விட்டார். உடனே, மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு கைதி தப்பிய விவகாரம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க: கள்ளக்குறிச்சி விவகாரத்தை அரசு மறைக்கிறதா? எம்எல்ஏக்களுக்கு சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகாரம் உள்ளதா.. அண்ணாமலை கேள்வி!




தனிப்படை அமைத்து தப்பியோடிய கைதி தேடுதல் வேட்டை
அதன் அடிப்படையில், தனிப்படை போலீசார் தப்பி ஓடிய கைதியே தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, சென்னை புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடினர். இதைத் தொடர்ந்து, தேனி மாவட்ட கிளை சிறையில் இருந்து சுமார் 17 கைதிகள் சிறை காவலர்களை தாக்கிவிட்டு தப்பி சென்றனர். இதேபோல, போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவரும் தப்பி சென்றார். அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.
அடுத்தடுத்து தப்பி செல்லும் சிறை கைதிகள்
ஆனால், போலீசார் தீவிரமாக செயல்பட்டு அனைத்து கைதிகளையும் கைது செய்து பல்வேறு மாவட்ட சிறைகளில் அடைந்திருந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தேனி சிறையில் 9 சிறை காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அனைத்து சிறைகளிலும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான், மதுரையில் தண்டனை கைதி ஒருவர் தப்பியுள்ளார்.
மேலும் படிக்க: நீலக்கொடி அங்கீகாரம்.. 6- ஆவது முறையாக மாஸ் காட்டிய கோவளம் கடற்கரை.. இந்த முறையும் தமிழகம் முன்னிலை!