கள்ளக்குறிச்சி விவகாரத்தை அரசு மறைக்கிறதா? எம்எல்ஏக்களுக்கு சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகாரம் உள்ளதா.. அண்ணாமலை கேள்வி!
We the Leaders Annamalai : கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச மெசெஜ் அனுப்பிய விவகாரத்தை தவெக அரசு மூடி மறைக்க பார்க்கிறதா, அந்தக் கட்சியின் எம்எல்ஏக்களுக்கு சட்டத்தை மீறிய அதிகாரம் ஏதும் உள்ளதா என்று வீ த லீடர்ஸ் அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு செல்போனில் ஆபாச மெசெஜ் கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு எதையோ மறைக்க பார்க்கிறதா என்ற கேள்வி எழுந்து வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியர் தலைமை செயலாளரிடம் புகார் அளித்தாரா. முதல் அமைச்சர் அலுவலகத்துக்கு புகார் அனுப்பப்பட்டதா. முதல் அமைச்சர் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினரை அழைத்து எச்சரிக்கை விடுத்தாரா என் மன உள்ளிட்டவை தொடர்பான செய்திகள் ஊடகத்தில் வெளியாவது உண்மையா, இல்லையா என்ற குழப்பம் நீடித்து வருகிறது.
சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகாரம் உள்ளதா
இந்தச் சூழலில் மறைந்த கார்ட்டூனிஸ்ட் ஆர். கே. லட்சுமணனின் புகழ்பெற்ற கார்ட்டூன் ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது. இதே குற்றச்சாட்டு ஒரு சாமானிய நபர் மீது எழுந்திருந்தால், இந்த அரசு இதே அளவு பொறுமையுடன் புகார் வந்ததா, புகார் வரவில்லையா இன்று விவாதம் மேற்கொண்டு இருக்குமா. ஆளும் கட்சியின் சட்டமன்ற எங்களுக்கு சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா. தமிழகத்தில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால், அதை செயலிலும் நிரூபிக்க வேண்டும். இதற்கான முழு பொறுப்பு முதல் அமைச்சருக்கு உள்ளது.
மேலும் படிக்க: ஆட்சியருக்கு ஆபாச மெசெஜ் அனுப்பிய விவகாரம்.. துப்பாக்கியால் சுட்டு தள்ளியிருப்பேன்.. பொங்கியெழுந்த ஜெயக்குமார்!




பெண் ஆட்சியருக்கு ஆபாச மெசெஜ் அனுப்பிய விவகாரம்
இந்த விவகாரத்தில் உண்மை என்ன என்பதை தமிழக அரசு வெளிப்படையாக தெளிவுபடுத்த வேண்டும் என்று அந்தப் பதிவில் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி தொகுதி தொகுதியின் தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ வாக இருந்து வருபவர் அருள் விக்னேஷ். இவர் சமீப நாட்களாக கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு செல்போனில் ஆபாச மெசெஜ் அனுப்பி வந்துள்ளார். இது தொடர்பான புகார் தலைமைச் செயலாளர், கள்ளக்குறிச்சி தொகுதியின் பொறுப்பு அமைச்சர் வன்னி அரசு உள்ளிட்டோருக்கு சென்றதாக தெரிகிறது.
அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு
ஒரு கட்டத்தில் எம்எல்ஏ அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியருக்கு தொடர் தொல்லை அளித்து வந்ததன் காரணமாக பெண் ஆட்சியரின் கணவருக்கு தெரியவந்தது. அவர், இது தொடர்பாக தவெக பொதுசெயலாளரும், அமைச்சருமான என். ஆனந்த் கவனத்துக்கு கொண்டு சென்றதாக தெரிகிறது. அவர், எம்எல்ஏ அருள் விக்னேஷை அழைத்து கண்டித்ததாக தெரிகிறது. இவ்வாறாக இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக இருந்து வருகிறது.
மேலும் படிக்க: தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமா? எதற்கும் நாங்கள் தயார்.. கே.ஏ.செங்கோட்டையன்!