AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்? எல்லாவற்றையும் பொதுவெளியில் பேச முடியாது – எடப்பாடி பழனிசாமி சூசகம்!

Edappadi Palaniswami On No Confidence Motion: நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்காமல், சில விஷயங்களைப் பொதுவெளியில் பேச முடியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. இதனால் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றன என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்? எல்லாவற்றையும் பொதுவெளியில் பேச முடியாது – எடப்பாடி பழனிசாமி சூசகம்!
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 12 Nov 2026 17:42 PM IST

நவம்பர் 12, 2026: தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுமா என்ற கேள்விக்கு, எல்லாவற்றையும் பொதுவெளியில் பேச முடியாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சூசகமாகப் பதிலளித்துள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகவும், முதலமைச்சர் விஜய் இதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

6 மாதங்களில் அதிகரிக்கும் அரசுக்கு எதிரான விமர்சனங்கள்

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றது. ஆட்சி அமைந்து ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அரசின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

மேலும் படிக்க: தூத்துக்குடி போலீஸுக்கு கிடைத்த ரகசிய தகவல்.. குடோனிலிருந்து 462 கிலோ புகையிலை பறிமுதல்.. 3 பேரை தூக்கிய அதிரடிப்படை!

குறிப்பாக, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. பல்வேறு பகுதிகளில் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதாகவும், சிறைகளில் இருந்து கைதிகள் தப்பிக்கும் சம்பவங்களும் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது – இபிஎஸ் காட்டம்

இந்தச் சூழலில், ஈரோடு மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “நான் ஏற்கனவே பலமுறை சொல்லிவிட்டேன். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது. முதலமைச்சர் விஜய் இதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும். இந்த அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து இன்று வரை கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த அரசு கும்பகர்ண தூக்கத்தில் இருக்கிறது. பலமுறை தட்டி எழுப்பினாலும் எழுந்தபாடில்லை. திராணியற்ற அரசாக இருப்பதால்தான் சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது” என்று கடுமையாக விமர்சித்தார்.

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுமா?

இதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளனவா என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

மேலும் படிக்க: தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமா? எதற்கும் நாங்கள் தயார்.. கே.ஏ.செங்கோட்டையன்!

இதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து செங்கோட்டையன் பேசுவது அவருடைய கருத்து. சில விஷயங்களைப் பொதுவெளியில் பேச முடியாது. அப்படி ஒரு சூழல் வரும்போது அனைத்து ஊடக நண்பர்களையும் அழைத்துப் பேசுவோம்” என்று தெரிவித்தார்.

அரசியல் வட்டாரத்தில் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்காமல், சில விஷயங்களைப் பொதுவெளியில் பேச முடியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. இதனால் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றன என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

Follow Us