Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Edappadi K Palaniswami

Edappadi K Palaniswami

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி. இவர் 1954ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி பிறந்தார். சேலம் மாவட்டத்திலேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த அவருக்கு அரசியல் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. இதனால் 1974ஆம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்த அவர், கோணேரிப்படி கிளைச் செயலாளராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 1989ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என பிரிந்து இருந்தபோது ஜெயலலிதாவின் அணியில் இருந்து, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு முதன்முதலாக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அரசியல் ஏற்ற இறக்கம் கண்டு, சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டமன்றத்திற்கு தேர்வான எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராகவும், 2016ல் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் கோலோச்சினார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதையடுத்து, 2017ல் அதிமுகவின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக முதலமைச்சராக பதவியேற்றார்

Read More

எடப்பாடி பழனிசாமியின் அதிமுக கூட்டத்தில் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

Edappadi K Palaniswami : கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி மேற்கொண்ட பரப்புரையின்போது ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மயங்கி விழுந்து உயிரிழந்தவர் ஈரோடு மாவட்டம் கொண்டம்பாளையத்தை சேர்ந்த அர்ஜுனன் என்பதும் அவர் அதிமுக தொண்டர் என்பதும் தெரியவந்துள்ளது.

அந்த கனவை நொறுக்கி விட்டீர்கள்…. கோபியில் செங்கோட்டையனை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி

Edappadi K Palaniswami : கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக பொது்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரையில் செங்கோட்டையன் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். அப்போது பேசிய அவர், ஓட்டு வாங்குவதற்கு உங்களை வந்து அணுகினார். ஆனால் ராஜினாமா செய்வதற்கு உங்களை கேட்டாரா? என கேள்வி எழுப்பினார்.

தவெகவில் செங்கோட்டையன்.. பதில் சொல்ல மறுத்த எடப்பாடி பழனிசாமி!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று அதாவது 2025 நவம்பர் 27ம் தேதி விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்கள் செங்கோட்டையன் குறித்து கேள்வி எழுப்பினர். இதுகுறித்து பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் இணைந்தது குறித்து பதில் சொல்ல தேவையில்லை” என்று தெரிவித்தார்.

29 மாவட்ட செயலாளர்களுக்கு வார்னிங் கொடுத்த எடப்பாடி பழனிசாமி.. களப்பணியில் கவனம் செலுத்த வேண்டும் என உத்தரவு..

ADMK District Secretaries Meet: இன்று காலை காணொளி காட்சி மூலம் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள், பூத் கமிட்டி செயல்பாடு, தேர்தல் பணிகள் எப்படி நடைபெற்று வருகின்றன என்பதையும் ஆய்வு செய்தார்.

“SIR பணிகளில் ஆளும் கட்சியின் தலையீடு”.. எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!!

தமிழ்நாட்டில் இன்று வரை 6.41 கோடி பேருக்கு (95.58 சதவீதம்) வாக்காளர் பட்டியல் கணக்கீட்டு படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. அதேசமயம், அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆளும் கட்சியின் கட்டுபாட்டில் பிஎல்ஓக்கள் உள்ளதாக குற்றம்சாட்டி வருகின்றன.

கோவை வந்த பிரதமர் மோடி – எடப்பாடி பழனிசாமி உற்சாக வரவேற்பு

EPS Welcomes PM Modi : கோவை வந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றார். கோவை வருகை தந்துள்ள பிரதமருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில், முன்னாள் அமைச்சர் ஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்

+2 மாணவி கொலை: பள்ளி மாணவிக்குக் கூட பாதுகாப்பு இல்லாத அவலநிலை.. தலைவர்கள் கடும் கண்டனம்!!

ராமேஸ்வரத்தில் காதலை ஏற்க மறுத்ததால் +2 மாணவி ஒருவர் பட்டப்பகலில் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த இளைஞர் முனிராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ், பிரேமலதா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து அரசை விமர்சித்துள்ளனர்.

SIR-ஐ ஆதரிப்பதா? ‘அதிமுக வாக்குகளே காலியாக போகிறது’.. சீமான் பாய்ச்சல்!!

Seeman on SIR; எஸ்ஐஆர் நடைமுறையை இந்த அளவுக்கு அவசர கதியில் அமல்படுத்துவது, மக்களிடையே தேவையில்லாத குழப்பத்தையும், நம்பிக்கையின்மையையும் அதிகரிக்கிறது என பல்வேறு தரப்பிலும் இருந்தும் விமர்சனம் எழுந்துள்ளன. தேர்தல் நேரத்தில் வாக்காளர் பட்டியலை மாற்றுவது ஜனநாயகத்தின் அடிப்படை கோட்பாட்டையே பாதிக்கும் என்றும் கூறுகின்றனர்.

ஆந்திராவுக்கு சென்ற தென் கொரிய நிறுவனம்.. விலாசிய நயினார் நாகேந்திரன், எடப்பாடி பழனிசாமி..

South Korea Investments: தென் கொரிய நிறுவனமான ஹ்வாசங், தனது முதலீட்டை ஆந்திரா மாநிலத்திற்கு திருப்பியுள்ளது. தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடுகள் ஆந்திரா மாநிலம் நோக்கி சென்றதை தொடர்ந்து, தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

திமுகவை கண்டித்து அறிவித்த போராட்டம் ஒத்திவைப்பு – அறிவிப்பு வெளியிட்ட அதிமுக – காரணம் என்ன?

AIADMK Protest Postponed : சிறப்பு தீவிர வாக்காளர்  திருத்தப் பணிகளில் ஆளும் திமுக அரசு முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டி, அதனை கண்டித்து அதிமுக போராட்டம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் இந்த போராட்டம் தற்போது ஒத்திவைக்கப்படுவதாக அதிமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

‘SIR பணிகளில் திமுக தலையீடு’.. அதிமுக நாளை ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!!

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தேர்தல் ஆணையத்தால் தெரிவித்துள்ளபடி, வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை சந்தித்து SIR படிவங்களை வழங்கும் பணியை செய்யாமல், அப்பகுதியில் உள்ள திமுக நிர்வாகிகள் அலுவலகத்திலோ அல்லது அவர்களது வீட்டு வாசலிலோ அமர்ந்து, படிவங்களை அளித்து பூர்த்தி செய்ய வைத்து பெறுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

‘SIR பணிகளுக்கு ஒரு மாத காலம் போதுமானது’.. சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி!!

Edappadi Palaniswami: பீகார் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு பொதுமக்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதன் மூலம் தங்கள் கூட்டணி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

நெருங்கும் தேர்தல்: மீண்டும் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி!

எடப்பாடி பழனிசாமி இதுவரை 5 கட்டங்களாக 172 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் சுற்றுப்பயணம் செய்து முடித்துள்ளார். தொடர்ந்து, தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மீண்டும் தனது சுற்றப்பயணத்தை தொடங்க அவர் முனைப்பு காட்டி வருகிறார். அதோடு, கட்சியின் செல்வாக்கை அதிகரிக்க மண்டல மாநாடு நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.

மனிதாபிமானமற்ற செயல், போர்க்கால நடவடிக்கை வேண்டும் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்

EPS Urges Swift Action : இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கும், மாலியில் 5 தமிழர்கள் கடத்தப்பட்டது குறித்தும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

‘SIR பணிகளில் காலதாமதம் ஏற்பட வாய்ப்பே இல்லை’.. அடித்துச் சொல்லும் எடப்பாடி பழனிசாமி!!

Special Intensive Revision (SIR): வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் அதிமுக தரப்பில் வழக்கு தொடர்ந்துள்ளது. SIR என்றாலே திமுக அலறுவது ஏன் என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, SIR பணிகளை மேற்கொள்ள ஒரு மாத காலம் போதும் என்றும் கூறியுள்ளார்.