AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Edappadi k.palaniswami Tamil Nadu Election: எடப்பாடி தொகுதியில் 5 முறை வெற்றியை பதிவு செய்த கே.பழனிசாமி!

Tamil Nadu Elections 2026 : அதிமுகவில் தொண்டனாக இணைந்து அந்தக் கட்சியில் பொதுச் செயலாளர் வரை எடப்பாடி கே. பழனிசாமி உயர்ந்துள்ளார். இவர், 7 முறை போட்டியிட்ட எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 5 முறை வெற்றியை பதிவு செய்துள்ளார் .

Edappadi k.palaniswami Tamil Nadu Election: எடப்பாடி தொகுதியில் 5 முறை வெற்றியை பதிவு செய்த கே.பழனிசாமி!
அதிமுகவில் தொண்டன் முதல் பொதுச்செயலாளர் வரை
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 04 Mar 2026 13:43 PM IST

அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்து வருபவர் எடப்பாடி கே. பழனிசாமி. இவர் கடந்த 1954- ஆம் ஆண்டு மே மாதம் 12-ஆம் தேதி கருப்ப கவுண்டர், தவசி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். அரசியல் ஆர்வம் காரணமாக கடந்த 1974- ஆம் ஆண்டு அதிமுகவில் அடிமட்ட தொண்டனாக இணைந்து அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். கட்சியில் முதன் முதலாக கோணேரிபட்டி கிளைச் செயலாளராக பணியாற்றினார். இப்படியாக அரசியல் வாழ்க்கை நகர்ந்து 1989- ஆம் ஆண்டில் முதல் முறையாக எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வாகி சட்டமன்றத்தில் தனது முதல் உரையை ஆற்றினார். இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருந்தாலும், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் எல். பழனிசாமியை வீழத்தி 1,364 வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி வெற்றியை பதிவு செய்தார். பின்னர் 2017- ஆம் ஆண்டு முதல்வராக ஆட்சி பொறுப்பேற்று 2021-ஆம் ஆண்டு வரை முதல்வர் பதவியில் இருந்தார்.

எம்எல்ஏ பதவியை தக்க வைத்து கொண்ட எடப்பாடி கே.பழனிசாமி

கடந்த 1989, 1991, 2011, 2016, 2021 ஆகிய சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் களமிறங்கி எம்எல்ஏ பதவியை தக்க வைத்துக் கொண்டார். இதில், கடந்த 1998- ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு மக்களவை எம்பி யாக தேர்வாகி நாடாளுமன்றத்தில் தனது முதல் உரையை ஆற்றினார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக இருந்து சிறப்பாக பணியாற்றினார்.

மேலும் படிக்க: தவெக தலைவர் விஜயை பின்தொடர்ந்து சென்று விபத்தில் சிக்கிய இளைஞர்கள்.. பகீர் சம்பவம்!

எடப்பாடி தொகுதியில் 7 முறை போட்டியிட்ட பழனிசாமி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த 2023- ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு கட்சியை வழிநடத்தி வருகிறார் எடப்பாடி கே. பழனிசாமி. எடப்பாடி தொகுதியில் 7 முறை தொடர்ச்சியாக போட்டியிட்ட எடப்பாடி பழனிசாமி 5 முறை வெற்றியை வசமாக்கி உள்ளார். இருமுறை தோல்வியை தழுவியுள்ளார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சம்பத்குமார் 68,082 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், எடப்பாடி கே. பழனிசாமி 1,60,931 வாக்குகள் பெற்று (65.97 சதவீத வாக்குகள்) வெற்றி பெற்றார்.

பழனிசாமிக்கு வெற்றியை தேடி தரும் எடப்பாடி தொகுதி

வருகிற சட்டமன்ற தேர்தலில் இதே சட்டமன்ற தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி போட்டியிட உள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தல்களில் இந்த தொகுதி அவருக்கு 5 முறை வெற்றியை சமர்ப்பித்ததை போல, இந்த தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமிக்கு வெற்றி வந்து சேரும் என்று கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க: அ.தி.மு.க. தொண்டர்கள் தி.மு.க.வுக்கே வாக்களிப்பார்கள்: ஓ.பி.எஸ்

Follow Us