AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்த அணி.. அந்த அணி.. டெல்லி அணியை தவெக அடித்து நொறுக்கும்… தஞ்சாவூரில் விஜய் ஆவேசம்!

Vijay Speech At Thanjavur TVK Meeting: வருகிற சட்டமன்ற தேர்தலில் இந்த அணி... அந்த அணி... டெல்லி அணியை தமிழக வெற்றிக் கழகம் அடித்து நொறுக்கும் என்று தஞ்சாவூரில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் ஆவேசமாக தெரிவித்தார்.

இந்த அணி.. அந்த அணி.. டெல்லி அணியை தவெக அடித்து நொறுக்கும்… தஞ்சாவூரில் விஜய் ஆவேசம்!
தஞ்சாவூரில் விஜய் பேச்சு
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 04 Mar 2026 12:09 PM IST

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் கூட்டம் இன்று புதன்கிழமை ( மார்ச் 4) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று பேசியதாவது: தமிழகத்தின் பிரதிநிதியாகவும், உண்மையான பிரதிநிதியாகவும் நாம் இருக்கிறோம். சென்னையில் டெல்லி டெல்லின்னு கூவும் சிலர் அடிக்கிற கொள்ளைக்கு ரைடு வந்தால் வெள்ளைக் கொடி பிடிக்கின்றனர். எனக்கும், தொடர்களுக்கும் இடையே யாரும் நுழைய முடியாது. இந்த அணி, அந்த அணி, டெல்லி அணி அனைத்தையும் தமிழக வெற்றிக் கழகம் அடித்து நொறுக்கும். மணல், கனிம வளக் கொள்ளை ஆகியவை நடைபெற்றால் பூமியில் தண்ணீர் எப்படி இருக்கும். இதனால், தமிழகம் தண்ணீர் இன்றி திவாலாக போகிறது. இந்த மணல் மாஃபியாகளுக்கு ஆதரவு அளிக்கிறது திமுக. இதை இல்லை என்று கூற முடியுமா. திமுக ஆட்சியில் தமிழகமும் திவாலாக போகிறது. பரந்தோர் விமான நிலையம், மேல்மா சிப்காட் ஆகியவற்றில் திமுகவின் நிலைப்பாடு என்ன.

தவெக ஆட்சியில் முக்கிய திட்டங்கள்

தவெக ஆட்சி அமைந்த உடன் முக்கியமான திட்டங்கள் அனைத்தும் உடனடியாக தொடங்கி ஆட்சி முடிவதற்குள் முடிக்கப்படும். மீனவர்கள் பிரச்சனைக்கு கடிதம் எழுதிவிட்டு முதல்வர் தூங்க சென்று விடுகிறார். தமிழக மீனவர்கள் மீது கை வைக்க முடியாத அளவுக்கு திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய சூழ்நிலையில் அடுத்து திமுக தான் ஆட்சி அமைக்கும் என்று சிஎம் சார் கூறுகிறார். அதற்கு வாய்ப்பு கிடையாது. ஒன்று நீ அல்லது நான். நமக்கு இடையில் யாரும் வரக்கூடாது என்று இரு கட்சிகள் திட்டம் வைத்துள்ளனர். இதில், விஜய் நடுவில் வந்ததால் தலைவலியாக உள்ளது என்று இருவர் பேசிக் கொள்கின்றனர்.

மேலும் படிக்க: 6 ராஜ்ய சபா எம்.பி. இடங்கள்.. யார் யாருக்கு வழங்கப்படும்.. பட்டியலில் உள்ள முக்கிய புள்ளிகள்!

கரூர் சம்பவம் முதல் ஜனநாயகன் படம் வரை சதி

கரூர் சம்பவம் முதல் ஜனநாயகன் படம் வரை சதி நடந்துள்ளது. ஏற்கனவே கட்சியினர் தொந்தரவு தாங்க முடியவில்லை. தற்போது விஜயும் தொந்தரவு செய்து வருகிறார். ஆயிரம் ரூபாய் கொடுத்து ஏமாற்றி வந்த நிலையில் 5,000 கொடுத்து ஏமாற்றலாம் என்று பார்த்தால் விஜய் அதற்கு வழி விட மாட்டார் என்ற மனநிலையில் சிஎம் சார் இருப்பார். தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் உர தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும். விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக வெற்றி கழகம் இருக்கும். நெல் கொள்முதலில் கமிஷன் இல்லாத ஆட்சி அமைக்கப்படும். 500 ரேஷன் கார்டுகளுக்கு ஒரு ரேஷன் கடை என்ற முறை அமல்படுத்தப்படும்.

ரேஷன் பொருள்கள் பாக்கெட்டில் விநியோகம்

ரேஷன் பொருட்கள் அனைத்தும் பாக்கெட் மூலம் விநியோகம் செய்யப்படும். கல்வி, மருத்துவம், சாலை வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தனியார் வேலை வாய்ப்புகளுக்கும் உத்தரவாதம் அளிக்கப்படும். ரேஷன் கடையில், பெண்களுக்கு பெண் எடையாளர்கள், ஆண்களுக்கு ஆண் எடையாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: மார்ச் 11-ல் மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.. NDA-ன் பிரம்மாண பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்!

Follow Us