AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மலையாள சினிமாவில் டைம்லூப் பாணியில் கலகலப்பாக வெளியான தூமகேது படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

OTT Review For Dhoomakethu Movie | மலையாள சினிமாவில் சமீபத்தில் டைம் லூப் பாணியில் கலகலப்பாக வெளியானது தூமகேது படம். இந்தப் படம் தற்போது ஓடிடிய்ல் வெளியாகி உள்ள நிலையில் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

மலையாள சினிமாவில் டைம்லூப் பாணியில் கலகலப்பாக வெளியான தூமகேது படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!
தூமகேதுImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 04 Nov 2026 18:26 PM IST

மலையாள சினிமாவில் வெளியாகும் படங்கள் கடந்த சில ஆண்டுகளாக மலையாள சினிமா (Malayala Cinema) ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளில் உள்ள சினிமா ரசிகர்களிடையேயும் அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி கடந்த 25-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு மலையாள சினிமாவில் வெளியான படம் தான் தூமகேது. டைம் லூப் பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தினை இயக்குநர் சுதி மேடிசன் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் சஜின் கோபு கதையின் நாயகனாக நடித்து இருந்தார். இவர் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் முன்னதாக வெளியான ஆவேஷம் படத்தில் ஃபகத் பாசிலுடன் இணைந்து அம்பான் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய ரசிகர்களிடையே பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படத்தில் இவருடன் இணைந்து நடிகர்கள் நிகிலா விமல், கணபதி எஸ்.பொதுவால், ஷைன் டாம் சாக்கோ, சித்தார்த் பரதன், மஞ்சு பிள்ளை, நியாஸ் பேக்கர் மற்றும் ஸ்ரீகாந்த் முரளி என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது.

டைம்லூப் பாணியில் கலகலப்பாக வெளியான தூமகேது படம் எப்படி இருக்கு?

அதன்படி இந்தப் படத்தில் திருமண வயதை மீறியும் சஜின் கோபுவிற்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு திருமணம் முடிவாகிறது. அவரை மிகவும் அழகான பெண்ணான நிகிலா விமல் திருமணம் செய்துகொள்ள சம்மதித்தது மொத்த ஊர்காரர்களையும் மூக்கில் விரல் வைக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கும் நிலையில் சஜின் கோபுவிற்கு திருமணம் முடிந்து முதலிரவு செல்வது போல ஒரு கனவு ஏற்படுகின்றது. அதில் அவர் முதலிரவிற்கு முன்பு முகமூடி அணிந்த சில நபர்களால் கொலை செய்யப்படுகிறார். அப்படி அவர் இறக்கும் போது கனவில் இருந்து எழுவது போல தோன்றுகின்றது.

Also Read… தர்மன் படத்திலிருந்து வெளியானது ஸ்ரீலீலாவின் அறிமுக வீடியோ!

ஒவ்வொரு முறையும் முதலிரவு வரை சென்று சிலரால் கொலை செய்வது பிறகு தூக்கத்திலிருந்து விழிப்பதுவாகவுமே இருக்கிறது. தனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்பதை எண்ணி மிகவும் குழப்பத்தில் இருக்கும் சஜின் கோபுவிற்கு அதற்கான விடை கிடைக்கின்றது. அதிலிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்பதே இந்த தூமகேது படத்தின் கதை. இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… பிக்பாஸ் சீக்ரெட் டாஸ்கில் முதல் டார்கெட் யார் தெரியுமா? வைரலாகும் புரோமோ வீடியோ!

Follow Us