Arasan: வேர்ல்ட் ஆப் அரசன் ப்ரோமோ தீபாவளிக்கு இல்லையா? சிம்பு ரசிகர்களுக்கு ஷாக் தகவல்!
World of Arasan Promo Release: தென்னிந்திய சினிமா வட்டாரங்களில் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகராக இருந்துவருபவர் சிலம்பரசன். இவரின் நடிப்பிலும், இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்திலும் உருவாகிவரும் திரைப்படம்தான் அரசன். இந்த படத்தின் ப்ரோமோ 2026ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என சிலம்பரசன் சொன்ன நிலையில், அதன் வெளியீடு குறித்து அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
கோலிவுட் மக்கள் கொண்டாடும் நாயகனாக இருந்துவருபவர்தான் சிலம்பரசன் (Silambarasan). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் இதுவரை கிட்டத்தட்ட 48 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் இவரின் நடிப்பில் 49வது திரைப்படமாக உருவாகிவருவதுதான் அரசன் (Arasan Movie). இந்த திரைப்படத்தை தமிழ் பிரபல இயக்குநர் வெற்றிமாறன் (Director Vetrimaaran) இயக்க, வீ க்ரியேஷன் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துவருகிறார். இந்த அரசன் திரைப்படமானது தனுஷின் வட சென்னை (Vada Chennai) படத்தின் பின்னணி கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படமாக இயக்கப்பட்டுவருகிறதாம். இந்த படத்தில் சிலம்பரசன் அரசன் என்ற வேடத்தில் நடித்துள்ள நிலையில், அவருடன் பிரியங்கா மோகன், யோகலட்சுமி உள்ளிட்ட பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர்.
மேலும் இப்படம் 2026 தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னும் ஷூட்டிங் நிறைவடையாத காரணத்தினால் வெளியாகவில்லை. அதற்கு பதிலால் “வேர்ல்ட் ஆப் அரசன்” (World of Arasan Promo) ப்ரோமோ வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், தற்போது அதன் வெளியீட்டிலும் சிக்கல் எழுந்துள்ளது.




இதையும் படிங்க: ரோஜாவாக ஸ்ரீலீலா… ஓம் படத்திலிருந்து ஸ்ரீலீலாவின் கதாபாத்திர அறிமுக வீடியோ!
அரசன் திரைப்படத்தின் ப்ரோமோ வெளியீட்டில் சிக்கல்:
நடிகர் சிலம்பரசனின் நடிப்பில் உருவாகிவரும் பிரம்மாண்ட திரைப்படம்தான் அரசன். இந்த படத்தில் சிலம்பரசன், பிரியங்கா மோகன், ஆண்ட்ரியா, கிஷோர் மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திலிருந்து தி வேர்ல்ட் ஆப் அரசன் என்ற ப்ரோமோ வீடியோ, 2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியிடப்படும் என சிலம்பரசன் முன்பே அறிவித்திருந்தார்.
இதையும் படிங்க: நோ சூர்யா… மணிரத்னம் இயக்கத்தில் தனுஷ் இணைந்து நடிப்பது இந்த நடிகரோடா? வைரலாகும் தகவல்
அந்த விதத்தில் தற்போது அது வெளியாவதில் சிக்கல் வந்துள்ளதாம். அரசன் பாட தயாரிப்பு நிறுவனத்தின் ட்ரெயின் படமானது 2026 டிசம்பர் 4ம் தேதியில் வெளியாகும் நிலையில், அந்த படத்தின் வெளியீட்டின்போது அரசன் பட ப்ரோமோவை வெளியிடலாம் என படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதனால் இப்படத்தின் ப்ரோமோ வெளியாக்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.
அரசன் திரைப்படத்தின் அறிமுக வீடியோ குறித்து சிலம்பரசன் பகிர்ந்த பதிவு:
Presenting the promo of #Arasan to you all 🙂
#ARASANPromo – https://t.co/Jh7WCRRa4n
#VetriMaaran @anirudhofficial @theVcreations #VCreations47 @prosathish @RIAZtheboss
— Silambarasan TR (@SilambarasanTR_) October 17, 2025
இந்த அரசன் திரைப்படத்தின் ஷூட்டிங்கில் சிலம்பரசன் தற்போது தீவிரமாக உள்ளாராம். இன்னும் சில நாட்களில் இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடையும் என கூறப்படுகிறது. இந்த படத்தை முடித்த கையேடு டியூட் பட இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் சிம்பு இணைவதாக கூறப்படுகிறது.