Silambarasan: அரசன் கோலிவுட்டையும் பெருமைப்படுத்தும்… சிலம்பரசனின் நெகிழ்ச்சி பேச்சு!
Silambarasan About Arasan Movie: தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் சிலம்பரசன். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் இவர் இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்துவருகிறார். அந்த விதத்தில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சிலம்பரசன், அரசன் திரைப்படம் குறித்து சிறப்பான அப்டேட்டை கொடுத்துள்ளார்.
நடிகர் சிலம்பரசன் (Silambarasan) தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நாயகனாக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில், இதுவரை மொத்தம் 48 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்த விதத்தில் இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான திரைப்படம் தக் லைஃப் (Thug Life). இந்த படத்தில் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்க, அவருடன் இரண்டாவது நாயகனாக சிலம்பரசன் நடித்திருந்தார். இந்த படம் கடந்த 2025ம் ஆண்டு மே மாதத்தில் வெளியாகியிருந்த நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படத்தின் ரிலீசிற்கு அடுத்ததாக, வெற்றிமாறனின் (Vetrimaaran) இயக்கத்தில் சிலம்பரசன் இணைந்தார். இதற்கு முன் பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலா கிருஷ்ணனின் இயக்கத்தில் இணைவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் சில காரணங்களால் அந்த படமானது கைவிடப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சிலம்பரசன் கலந்துகொண்டார். அந்த நிகழ்;சியில் பேசிய அவர், அரசன் (Arasan) திரைப்படம் குறித்து நெகிழ்ச்சியாக பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: பிக் பாஸ் 10 கலந்துகொள்ளும் 21 போட்டியாளர்கள்.. அட இவர்களுமா?
அரசன் திரைப்படம் குறித்து நடிகர் சிலம்பரசன் பகிர்ந்த நெகிழ்ச்சியான விஷயங்கள்:
அந்த நிகழ்ச்சியின் மேடையில் பேசிய நடிகர் சிலம்பரசன்,”அரசன் படத்திற்காக நானும், அனிருத்தும் கைகோர்க்கிறோம். துரந்தர் இந்தித் திரையுலகில் இருந்து வந்து, அதன் திரையுலகிற்குப் பெருமை சேர்த்து, இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களால் கொண்டாடப்பட்டது போல, அரசன் கோலிவுட்டையும் பெருமைப்படுத்தும்.
இதையும் படிங்க: இரும்புத்திரை படத்தின் முதல் சாய்ஸ் விஷால் இல்லை… இயக்குநர் பி.எஸ்.மித்திரன்
நாம் நினைப்பது போல, இது குறுகிய காலத்தில் முடித்துவிடக்கூடிய ஒரு சிறிய திரைப்படம் அல்ல. இந்தப் படம் எனது இளமைப் பருவம் முதல் முதுமைப் பருவம் வரையிலான ஒரு மாபெரும் பயணத்தை விவரிக்கிறது. மேலும், இந்தப் படத்தில் நான் பலவிதமான தோற்றங்களில் வந்துள்ளேன். இந்தப் படத்தில் யதார்த்தமான கூறுகள் நிறைய உள்ளன” என அந்த நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
அரசன் திரைப்படம் குறித்து சிலம்பரசன் பேசியதாக இணையத்தில் வைரலாகும் எக்ஸ் பதிவு:
#SilambarasanTR About #Arasan:
This is not a small film that we are going to finish within a short period of time, as we might assume. The film spans a huge journey—from my young age to my old age—and I have several different looks in the film. There are a lot of realistic… pic.twitter.com/YcBCus4HuX
— Movie Tamil (@_MovieTamil) September 4, 2026
அரசன் படத்தின் ஷூட்டிங் இன்னும் முடிவடையாத நிலையில், 2027ம் ஆண்டு கோடைக்காலத்தில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் 2026ம் ஆண்டு தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அன்று அரசன் படத்தின் முக்கியமான வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளதாம். இந்த படம் வட சென்னை பட டைம் லைனில் நடக்கும் மற்றொரு கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுவரும் நிலைக்குயில், நிச்சயம் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.