பிக் பாஸ் 10 கலந்துகொள்ளும் 21 போட்டியாளர்கள்.. அட இவர்களுமா?
Bigg Boss Tamil 10 Contestants List: ரியாலிட்டி நிகழ்ச்சியாக மக்கள் மத்தியில் பிரபலமான ஒன்று பிக் பாஸ். 2026ம் ஆண்டிற்கான பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது விரைவில் தொடங்குகிறது. அந்த விதத்தில், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் 21 போட்டியாளர்கள் யார் யார் என விவரமாக பார்க்கலாம்.
தென்னிந்திய மக்கள் மத்தியில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பிக் பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்ச்சியானது மொத்தம் 100 நாட்களில் ஒரே வீட்டில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியாகும். இதில் எந்தவித தொடர்பும் இல்லாத போட்டியளார்கள் கலந்துகொண்டு, அந்த 100 நாட்களில் அவர் சமாளிக்கும் மற்றும் போட்டிகளில் கலந்துகொண்டு யார் இறுதிக்கட்டத்தில் முன்னேறுவர் மற்றும் யார் வெற்றியாளர் என்பதே இந்த நிகழ்ச்சியாகும். தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த 2017ம் ஆண்டிலே தொடங்கிய நிலையில், இதுவரை மொத்தம் 9 சீசன்கள் நிறைவடைந்துள்ளது.
மேலும் 2026ம் ஆண்டிற்கான பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியும், 2026ம் ஆண்டு செப்டம்பர் 06ம் தேதியில் ஒளிபரப்பாகிறது. அந்த விதத்தில், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அந்த 21 போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க : பிக்பாஸ் தமிழ் சீசன் 10 கலந்துகொள்ளும் முன்னாள் போட்டியாளரின் மனைவி? வைரலாகும் தகவல்
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி குறித்து வெளியான புரோமோ பதிவு:
3 Days To Go | Bigg Boss Tamil Season 10 😎🔥
Bigg Boss Tamil Season 10 🔥 GRAND LAUNCH – செப்டம்பர் 6 மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவில..#Ottikichi #VijaySethupathi #BiggBossTamilSeason10 #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamil #BB10… pic.twitter.com/BCeOsrgL1D
— Vijay Television (@vijaytelevision) September 3, 2026
பிக் பாஸ் சீசன் 10ல் கலந்துகொள்ளும் 21 போட்டியாளர்கள் யார்:
இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்துகொள்கிறார்களாம். இந்த போட்டியானது 2026ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதியில் தொடங்கவுள்ள நிலையில், இதன் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில், சீரியல் நடிகை ஷபானாவின் கணவர் ஆர்யன், சீரியல் நடிகர் நவீன் குமார், நடிகை ஷபானாவின் கணவரும், நடிகருமான ஆர்யன், ஈரமான ரோஜாவே சீரியல் நடிகர் வினோத் பாபு, சீரியல் நடிகர் புவியரசு, பார்கவ் ராம், இன்ஸ்டா பிரபலம் ராஜ்பிரியம், டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர், விமர்சகர் பிரசாந். மேலும் தி காமன் மேன் நிகழ்ச்சியிலிருந்து முனியம்மாள், கரீஷ்மா மற்றும் ஜேசன் போன்ற போட்டியாளர்கள் கலந்துகொள்கிறார்களாம்.
இதையும் படிங்க: ஐ அம் கேம்… துல்கர் சல்மானுக்கு மீண்டும் ஒரு வெற்றிப் படமா? எக்ஸ் விமர்சனம் இதோ!
பெண் போட்டியாளர்களாக பாண்டியன் ஸ்டோஸ் சீரியல் நடிகை ஹேமா ராஜ்குமார், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, சீரியல் நடிகை அக்ஷதா, கனா காணும் காலங்கள் சீசன் 2 நடிகை பானுமதி, சீரியல் நடிகை ஆலியா மானசா மற்றும் மகாநதி சீரியல் நடிகை பிரியா போன்ற பிரபலங்கள் கலந்துகொள்வதாக இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது.