Bigg Boss 10: பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் சீக்ரட் ரூம் இருக்கா? வைரலாகும் தகவல்!
Bigg Boss Tamil Season 10: தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது விரைவில் தொடங்கவுள்ளது. அந்த விதத்தில் இந்நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான புரோமோ ஒன்றில் இந்த நிகழ்ச்சியில் சீக்ரட் ரூம் இருப்பதுபோலவே தெரிகிறது. அது குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பிக் பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்ச்சியானது ஆண்டுதோறும் புது புது கான்செப்டில் ஒளிபரப்பாகிவருகிறது. அந்த விதத்தில் இறுதியாக பிக் போச்சா சீசன் 9 (Bigg Boss season 9) வெளியாகி மக்கள் மத்தியில் மிகவும் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. அதை தொடர்ந்து இந்த 2026ம் ஆண்டில் செப்டம்பர், மாதத்திலே பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss season 10) நிகழ்ச்சியானது தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுவிட்டது. அந்த விதத்தில் இந்நிகழ்ச்சியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பிக் பாஸ் தி காமம் மேன் (Bigg Boss The Comman Man) நிகழ்ச்சியிலிருந்து மொத்தம் 3 போட்டியாளர்கள் கலந்துகொள்வதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சமீபத்தில் வெளியான புரோமோ ஒன்றில், பிக் பாஸ் ஈசன் 10 நிகழ்ச்சியில் சீக்ரட் ரூம் இருப்பதுபோலவே காண்பிக்கப்பட்டிருக்கிறது. அந்த விதத்தில், அது தொடர்பாக இணையத்தில் ரசிகர்கள், இந்த முறை பிக் பாஸ் வீட்டில் சீக்ரட் ரூம் இருக்கிறதா? என கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். இது குறித்து விவரமாக பார்க்கலாம்.




இதையும் படிங்க: நிஜ வாழ்க்கைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.. சர்தார் 2 படம் குறித்து சொன்ன சூர்யா!
இணையத்தில் வைரலாகும் பிக் பாஸ் சீசன் 10 குறித்த புரோமோ வீடியோ பதிவு:
4 Days To Go | Bigg Boss Tamil Season 10 😎🔥
Bigg Boss Tamil Season 10 🔥 GRAND LAUNCH – செப்டம்பர் 6 மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவில..#Ottikichi #VijaySethupathi #BiggBossTamilSeason10 #CarniVizha Bigg BossSeason10Tamil BiggBoss10 BiggBossSeason10 BiggBossTamil BB10… pic.twitter.com/I0o0Qh051F
— Vijay Television (@vijaytelevision) September 2, 2026
இந்த வீடியோவில் விஜய் சேதுபதி இருக்கும் நிலையில், அவரின் பின் நிறைய அறைகள் இருப்பதுபோலவே இருக்கிறது. இந்த முறை பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது சர்க்கஸ் கூடாரத்தை போலவே அமைக்கப்பட்டுள்ளதாம். அந்த விதத்தில், இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகர்கள் முதல் இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் வரை பல்வேறு போட்டியாளர்கள் கலந்துகொள்கிறார்களாம். இந்த நிகழ்ச்சியானது வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டுவரும் நிலையில், நிச்சயம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஐ அம் கேம் முதல் இம்மார்டல் வரை… இந்த வாரம் தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ
பிக் பாஸ் சீசன் 10 போட்டியாளர்கள் லிஸ்ட்:
இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ஆர்யன், கிரிக்கெட் வீரர் முரளி விஜய், புவியரசு, நவீன், ராஜ்பிரியம், டான்சர் ஸ்ரீதர், விமர்சகர் பிரசாந்த், வினோத் பாபு, ஹேமா ராஜ்குமார், ஆலியா மானசா, பானுமதி மற்றும் பிரியா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்துகொள்கிறார்களாம். மொத்தம் 21 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் செப்டம்பர் 06ம் தேதியி, மாலை 6 மணியளவில் தொடங்கவுள்ள நிலையில், போட்டியாளர்களின் இறுதி அப்டேட்டுகளும் உறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.