Suriya: நிஜ வாழ்க்கைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.. சர்தார் 2 படம் குறித்து சொன்ன சூர்யா!
Suriya Praises Karthis Sardar 2: தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நாயகனாக இருந்துவபருப்பவர் சூர்யா. இவர் சமீபத்தில், நடிகர் கார்த்தியின் சர்தார் 2 படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், சர்தார் 2 படம் பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
நடிகர் சூர்யா (Suriya) தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற சினிமாவில் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமானவர். முன்னாள் நடிகர் தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) படத்திற்கு அடுத்ததாக, சூர்யாவுக்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் உண்டு, அதுபோல தெலுங்கிலும் உண்டு. அந்த விதத்தில், இந்த 2026ம் ஆண்டில் மட்டும் சூர்யாவின் நடிப்பில் கருப்பு (Karuppu) மற்றும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath and Sons) என இரு திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. வெளியான இந்த இரு படங்களுமே கிட்டத்தட்ட ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இந்த வரிசையில், தற்போது சூர்யாவின் நடிப்பில் மேலும் 2 படங்கள் மிக பிரம்மாண்டமாக உருவாகிவருகிறது. இயக்குநர் ஜித்து மாதவன் (Jithu Madhavan) இயக்கத்தில் சூர்யா 47 (Suriya 47) மற்றும் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா48 (Suriya48) என இரு படங்கள் மிக பிரம்மாண்டமாக உருவாகிவருகிறது.
அந்த பிஸியான நேரத்திலும், தனது தம்பியும் நடிகருமான கார்த்தியின் (Karthi), சர்தார் 2 (Sardar 2) படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியின்போது பேசிய சூர்யா, கார்த்தியின் சர்தார் 2 படம் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: இது புதுசா இருக்கே… ஐ அம் கேம் படத்திற்கு புரமோஷ்னல் பாடலை வெளியிட்ட படக்குழு
நடிகர் கார்த்தியின் சர்தார் 2 திரைப்படம் குறித்து பேசிய நடிகர் சூர்யா:
அந்த நிகழ்ச்சியின்போது பேசிய சூர்யா, “எனக்கு சர்தார் 2 டிரெய்லர் மிகவும் பிடித்திருந்தது. நெட்ஃபிலிக்ஸில் ஒரு சர்வதேசத் தரப் படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது, ஆனால் இதில் சிறந்த விஷயம் என்னவென்றால், இது நமது கார்த்தியின் படம்.
இதையும் படிங்க: ஃபெண்டாஸ்டிக்… அவுட் ஸ்டாண்டிங்… மார்வலஸாக வெளியானது சர்தார் 2 படத்தின் ட்ரெய்லர்
50 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட சர்தார் பாகம் 1-ஐப் போலவே, இதன் கதையும் ஒரு நிஜ வாழ்க்கைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. பி.எஸ்.மித்ரன் ஒரு அற்புதமான எழுத்தாளர் மற்றும் இயக்குநர். தமிழ் சினிமாவில் இதுபோன்ற உளவாளி திரில்லர்கள் அரிதாகவே கிடைக்கின்றன. சர்தார் 2-க்காக மிகவும் ஆவலாக உள்ளேன் என அதில் கூறினார்.
சர்தார் 2 திரைப்படத்தின் ட்ரெய்லர் குறித்து பகிர்ந்த நடிகர் கார்த்தி:
#Sardar2 Trailer is here!
Tamil : https://t.co/XetVn1ESqf
Telugu : https://t.co/bDJ6ffBYWB#Sardar2FromSep10— Karthi (@Karthi_Offl) August 31, 2026
கார்த்தியின் சர்தார் 2 படமானது சிறப்பான ஸ்பை திரில்லர் பாணியில் உருவாகியுள்ளது., இதில் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் 2026ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.