AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Dharman: தர்மன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் இயக்குநர் அஸ்வத்.. உண்மை என்ன?

Ashwath Marimuthu to play key role In Dharman: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் புதிதாக உருவாகிவரும் திரைப்படம்தான் தர்மன். இதை டிராகன் பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் நிலையில், கமல்ஹாசன் தயாரித்துவருகிறார். இந்நிலையில், இப்படத்தில் அஸ்வத் மாரிமுத்து நடிப்பதாக தகவல்கள் கூறுகிறது. அது குறித்து பார்க்கலாம்.

Dharman: தர்மன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் இயக்குநர் அஸ்வத்.. உண்மை என்ன?
ரஜினிகாந்த் மற்றும் அஸ்வத் மாரிமுத்துImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 31 Aug 2026 16:27 PM IST

தமிழ் சினிமாவில் ஓ மை கடவுளே (Oh My Kadavule) என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக நுழைந்தவர் அஸ்வத் மாரிமுத்து (Ashwath Marimuthu). இந்த படத்தில் அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் நடித்திருந்த நிலையில், சூப்பர் ஹிட்டாகியிருந்தது. இதற்கு பின், பிரதீப் ரங்கநாதனின் (Pradeep Ranganathan) டிராகன் (Dragon) படத்தை இயக்கியிருந்தார். 2024ம் ஆண்டில் வெளியாகியிருந்த இப்படமும் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருந்தது. அந்த வரிசையில் 3வது இவர் இயக்கும் புதிய திரைப்படம்தான் தர்மன் (Dharman) . இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) லீட் நயாகனாக நடிக்க, கமல்ஹாசன் (Kamal Haasan) ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரித்துவருகிறார். ஆரம்பத்தில் இப்படம் தலைவர் 173 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் சிறப்பாக தொடங்கப்பட்டிருந்தது.

தற்போது சென்னை மற்றும் ஹைதராபாத்தில் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுவருகிறது. இப்படத்தின் கதை சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில், இதன் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது. அந்த வகையில், இப்படத்தில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து முக்கியமான வேடத்தில் நடிக்கிறாராம். இது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிறது.

இதையும் படிங்க: என்னோட ஐஆம் கேம் பட தொடக்கமே லோகேஷ்தான் – கதிர் நெகிழ்ச்சி!

தர்மன் படத்தில் முக்கிய வேடத்தில் அஸ்வத் மாரிமுத்து:

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, இறுதியாக இவரின் இயக்கத்தில் வெளியான டிராகன் படத்திலே ஒரு சிறிய மற்றும் படத்தில் திருப்பமாக அமையும் ஒரு வேடத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது பிரதீப் ரங்கநாதன் தயாரிக்கும் புதிய படத்திலும் ஒரு முக்கியமான வேடத்தில் இவர் நடித்துவருகிறார்.

இதையும் படிங்க: இம்மார்ட்டல் பட டைட்டில் முதலில் அதுதான்.. ஓபனாக பேசிய ஜி.வி.பிரகாஷ்!

அந்த விதத்தில் தர்மன் படத்தை இவர் இயக்கிவரும் நிலையில், முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் உண்மையாக இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இயங்குவதையும் தாண்டி, தற்போது நடிப்பிலும் அஸ்வத் மாரிமுத்து ஆர்வம் காட்டிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்தின் தர்மன் திரைப்படம் குறித்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து வெளியிட்ட பதிவு:

இந்த தர்மன் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் டாக்டராக நடிக்கிறார். இவர் சினிமாவில் டாக்டராக நடிக்கும் முதல் படமே இதுதான். இந்த படத்தில் ரஜினிகாந்துடன் நடிகைகள் சிம்ரன் மற்றும் ரக்ஷி கண்ணாவும் நடிக்கிறார்கள். மேலும் ஷ்ரேயா சரனும் இப்படத்தில் நடிப்பதாக வட்டாரங்கள் கூறுகிறது. இப்படம் சிறப்பாக உருவாகும் நிலையில், 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளது.

Follow Us