Sardar 2: சர்தார் டே.. சர்தார் 2 பட ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட அப்டேட்!
Sardar 2 Trailer & Audio Launch: தென்னிந்திய மொழிகளில் நாயகனாக நடித்துவருபவர் கார்த்தி. இவர் இயக்குநர் பி.எஸ்.மித்ரனின் இயக்கத்தில், 2வது முறையாக இணைந்திருந்த படம்தான் சர்தார் 2. இப்படம் செப்டம்பர் தொடக்கத்தில் வெளியாகும் நிலையில், இன்று (31/08/2026) இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெறுவதாக படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் கார்த்தியின் (Karthi) நடிப்பில் தமிழ் சினிமாவில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள, ஆக்ஷன் மற்றும் ஸ்பை திரில்லர் திரைப்படம்தான் சர்தார் 2 (Sardar 2). இதை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் (PS Mithran) இயக்க, பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனமானது மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இப்படமானது கடந்த 2022ம் ஆண்டில் வெளியான சர்தார் 1 படத்தின் தொடர்ச்சியான கதையில் உருவாகியுள்ளதாம். சர்தார் 1 படம் வாட்டர் மாஃபியா கதையில் உருவான நிலையில், சர்தார் 2 படம் மெடிக்கல் மாஃபியா கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்த படத்தில் கார்த்தி லீட் நாயகனாக நடிக்க, அவருடன் மாளவிகா மோகனன் (Malavika Mohanan) , ரஜிஷா விஜயன் (Rajisha Vijayan), ஆஷிகா ரங்கநாத் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.
மேலும் இப்படத்தில் மெயின் வில்லனாக நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். இப்படமானது, 2026ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. அதை முன்னிட்டு இன்று இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசைவெளியீட்டு விழா நடைபெறுகிறதாம். அது குறித்து அப்டேட்டை படக்குழு வழங்கியுள்ளது.




இதையும் படிங்க: இம்மார்ட்டல் பட டைட்டில் முதலில் அதுதான்.. ஓபனாக பேசிய ஜி.வி.பிரகாஷ்!
சர்தார் 2 படத்தின் ஆடிய லான்ச் மற்றும் ட்ரெய்லர் ரிலீஸ்:
கார்த்தி மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் காம்போவில் முதல் முறையாக இந்த சர்தார் 2 படமானது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படமானது ஸ்பை திரில்லர் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அதீத எதிர்பார்ப்புகள் இருந்துவருகிறது.
இதையும் படிங்க: விக்ரம் பிரபு படத்தில் நடிகையாக அறிமுகமாகும் அமலா ஷாஜி..!
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ள நிலையில், படத்தின் பின்னணி மற்றும் பாடல்கள் சிறப்பாக உருவாகியுள்ளது. அந்த விததில் இன்று (31/08/2026) இப்படத்தின் ட்ரெய்லர் , இரவு 8:!5 மணியளவில் வெளியிடுவதாக படக்குழு அப்டேட்டை கொடுத்துள்ளது.
சர்தார் 2 திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
#Sardar2 Trailer and Audio From 8.15 PM Today 🔥
It’s time to go ‘All Guns Blazing’ 💥
All of you, please be at the rendezvous point on time ⚡️@Karthi_Offl @Psmithran @iam_SJSuryah @ivyofficial2023 @SamCSmusic @george_dop @editorvijay @rajeevan69@lakku76 @venkatavmedia… pic.twitter.com/O5GDGCN6aw
— Prince Pictures (@Prince_Pictures) August 31, 2026
சர்தார் 2 படமானது செப்டம்பர் 10ம் தேதியோடு தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் மிக பிரம்மாண்டமாக வெளியாகிறது. இந்த படமானது கார்த்திக்கு மீண்டும் வரவேற்பை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026ல் கார்த்தியின் வா வாத்தியார் படத்தின் தோல்விக்கு பின், சர்தார் 2 வெற்றியாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.