AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வெறும் 10 நாட்களில்.. நிவின் பாலி – மமிதாவின் பெத்லகேம் குடும்ப யூனிட் பட மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

BKU Movie 10th Day Collection: மலையாள சினிமாவில் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜூவின் காம்போவில் மிக பிரம்மாண்டமாக வெளியான படம்தான் பெத்லகேம் குடும்ப யூனிட். இப்படம் மலையாளத்தில் வெளியாகி கிட்டத்தட்ட 10 நாட்களான நிலையில், மொத்தம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

வெறும் 10 நாட்களில்.. நிவின் பாலி – மமிதாவின் பெத்லகேம் குடும்ப யூனிட் பட மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
பெத்லகேம் குடும்ப யூனிட்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 30 Aug 2026 18:18 PM IST

பிரேமலு பட இயக்குநரின் இயக்கத்தில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பின், சினிமாவில் வெளியான திரைப்படம்தான் பெத்லகேம் குடும்ப யூனிட் (Bethlehem Kudumba Unit). இயக்குநர் கிரிஷ் ஏடி (Girish AD) இயக்க, இதில் நிவின் பாலி (Nivin Pauly) மற்றும் மமிதா பைஜூ (Mamitha Baiju) இணைந்து ஜோடியாக நடித்துள்ளனர். மேலும் பிரேமலு படத்திற்கு பின் மமிதா மலையாளத்தில் நடித்த திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பான காதல் கதையில் இப்படமானது உருவாகியுள்ள நிலையில், மலையாளத்தில் கடந்த 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதியில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியிருந்தது. இந்த படமானது சிறப்பான கதைக்களத்தில் வெளியான நிலையில், 2026ம் ஆண்டு ஓணம் ரேஸில் மக்களுக்கு மிகவும் பிடித்த படமாக இது அமைந்தது.

தற்போது இப்படமானது தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்திருக்கிறது. இன்றுடன் (30/08/2026) இந்த திரைப்படமானது வெளியாகி கிட்டத்தட்ட 10 நாட்களை கடந்திருக்கும் நிலையில், மொத வசூலை படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது தி பாரடைஸ் படத்தின் யேஷநகுலா பாடல்

10 நாட்களில் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜூவின் பெத்லகேம் குடும்ப யூனிட் பட வசூல் விவரம் :

இந்த பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படமானது 10 நாட்களில் உலகமெங்கும் சுமார் ரூ 178.68 கோடிகளுக்கு மேல் வசூலை ஈட்டியுள்ளது. இப்படம் முதல் நாளில் ரூ 16.20 கோடியை வசூல் செய்திருந்தது. தற்போது 9வது நாளில் ஒரு நாளுக்கு ரூ 24.25 கோடிகளுக்கு மேல் வசூல் என, மொத்தமாக ரூ 178.68 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜேசன் சஞ்சய் இயக்குநராக இல்லாமல் நடிப்பை தேர்வு செய்திருந்தால்… நடிகர் சந்தீப் கிஷன் ஓபன் டாக்

பெத்லகேம் குடும்ப யூனிட் படத்தின் 10வது நாள் பாக் ஆபிஸ் வசூல் குறித்த எக்ஸ் பதிவு:

நிவின் பாலியின் இயற்கையான நடிப்பில் பெத்லகேம் குடும்ப யூனிட் படமானது அமைந்திருந்தது. இதில் நிவின் பாலி ஜஸ்டின் என்ற வேடத்திலும், மமிதா பைஜூ அஸ்லே என்ற வேடத்திலும் நடித்திருந்தனர் இசை சார்ந்த, ஒரு பீல் குட் காதல் கதையில் இப்படமானது மலையாளத்தில் வெளியாகியிருந்தது. அந்த வகையில் வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதியில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us