யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது தி பாரடைஸ் படத்தின் யேஷநகுலா பாடல்
Yeshanagula is trending no 1 on YouTube | நடிகர் நானியின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் தி பாரடைஸ். இந்தப் படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் நேற்று வெளியான நிலையில் அது தற்போது யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் நானி. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து நாயகனாக மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும் தொடர்ந்து படங்களில் பணியாற்றி வருகிறார் நானி. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியகாவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருவது போல தயாரிப்பில் வெளியாகும் படங்களும் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் நானியின் நடிப்பில் தெலுங்கு சினிமாவில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் தி பாரடைஸ். இந்தப் படத்தின் பணிகள் ஒரு ஆண்டுக்கு மேலாக நடைப்பெற்று வருகின்றது.
மேலும் தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநராக உள்ள இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் முன்னதாக படத்தில் இருந்து முதல் சிங்கிள் வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து தற்போது இரண்டாவது சிங்கிள் வெளியாகி உள்ளது.




யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது யேஷநகுலா பாடல்:
அதன்படி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையில் வெளியான அந்தப் பாடல் யேஷநகுலா என்ற பெயரில் ஒரு ஐடம் நம்பராக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடலில் நடிகர் நானி உடன் இணைந்து நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்பு நடனம் ஆடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் பாடல் நேற்று ஒரு நிகழ்ச்சி நடத்தி வெளியான நிலையில் இன்று அந்தப் பாடல் தற்போது யூடியூபில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்து உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… லோகேஷ் கனகராஜின் டிசி படத்தின் ஓடிடி அப்டேட் வெளியானது – வைரலாகும் தகவல்
தி பாரடைஸ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Yeshanagula fever has taken over the world 🎼💥💥💥#TheParadise second single #Yeshanagula is TRENDING #1 on YouTube with 20 MILLION+ VIEWS & 380K+ LIKES 🔥🔥
▶️ https://t.co/yqhCQaF2JdGRAND RELEASE WORLDWIDE ON 24.09.26.
Natural Star @NameisNani & @KeerthyOfficial in an… pic.twitter.com/oBkXtxEX1p
— SLV Cinemas (@SLVCinemasOffl) August 30, 2026
Also Read… Nivin Pauly: நிவின் பாலி – மமிதா பைஜூவின் பெத்லகேம் குடும்ப யூனிட் பட தமிழ் ட்ரெய்லர் வெளியீடு!