Keerthy Suresh: கீர்த்தி சுரேஷின் சிறப்பு நடனத்தில்.. நானியின் தி பாரடைஸ் பட ‘யேஷநகுலா’ பாடல் வெளியீடு!
Yeshanagula Song: தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களால் நேச்சுரல் ஸ்டார் என அழைக்கப்பட்டுவருபவர் நானி. இவரின் நடிப்பிலும், இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலாவின் இயக்கத்திலும் உருவாகிவரும் புது படம்தான் தி பாரடைஸ். அனிருத்தின் இசையில் உருவாகியுள்ள இப்படத்திலிருந்து, தற்போது யேஷநகுலா என்ற லிரிக்கல் பாடல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடவும் நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் நேச்சுரல் ஸ்டார் நானி (Nani). இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் படங்கள் வெளியாகியிருக்கிறது. இவர் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி (SS. Rajamouli) முதல் பல்வேறு உச்ச இயக்குநர்களுடன் படங்களில் இணைந்து பணியாற்றியிருக்கிறார். ஆரம்பத்தில் படங்களில் அசிஸ்ட்டண்ட் டைரெக்ட்டராக இருந்த இவர், தற்போது சினிமாவில் லீட் நாயகனாக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் இதுவரை பல்வேறு படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த விதத்தில், இறுதியாக வெளியான திரைப்படம் ஹிட் 3 (HIT3). இப்படத்திற்கு பின் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலாவுடன் (Srikanth Odela) இணைந்த திரைப்படம்தான் தி பாடரைஸ் (The Paradise).
அதிரடி ஆக்ஷன் மற்றும் கேங்ஸ்டர்ஸ் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ள நிலையில், இன்று (29/08/2026) 2வது பாடலான “யேஷநகுலா” (Yeshanagula) என்ற லிரிக்கல் பாடல் வெளியாகியுள்ளது. இதில் நானியுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh) சிறப்பு நடனமாடியுள்ளார்.
இதையும் படிங்க: 25 வருச உழைப்பு… சூரியின் சினிமா பயணத்தை பாராட்டிய ஆர்.ஜே.பாலாஜி
மீண்டும் இணைந்த நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் காம்போ:
நாணி மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் ஏற்கனவே தசரா என்ற திரைப்படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர். மேலும் தி பாரடைஸ் படத்தை இயக்கியிருந்த அதே இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலாதான் அப்பத்தையும் இயக்கியிருந்தார். 2023ம் ஆண்டில் வெளியாகி அந்த படம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இதையும் படிங்க: பிரித்விராஜ் சுகுமாரின் டாய்ரா படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ
அந்த படத்திற்கும் அனிருத்தான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விதத்தில் மீண்டும் இந்த காம்போ இணைந்துள்ளது. கீர்த்தி சுரேஷ் நானியுடன் இணைந்து, இப்படத்தில் யேஷநகுலா என்ற பாடலில் சிறப்பு நடனமாடியுள்ளார். இவர்கள் இருவரின் காம்போ திரியில் பார்ப்பதற்கு மக்கள் ஆர்வமாக இருகிறார்கள்.
தி பாரடைஸ் படத்தின் யேஷநகுலா லிரிக்கல் பாடல் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Wherever you are in the world, one thing is guaranteed 🌍🔥
When #Yeshanagula hits the big screen, theatres are going to turn into LIVE CONCERTS 🔥🔥🔥#TheParadise second single out now!
▶️ https://t.co/ffTvysQUodGRAND RELEASE WORLDWIDE ON 24.09.26. https://t.co/4CZ5Dqkwin
— THE PARADISE (@TheParadiseOffl) August 29, 2026
நானியின் தி பாரடைஸ் திரைப்படமானது எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இப்படத்தில் நானி, கயாடு லோஹர், மோகன் பாபு, ராகவ் ஜுயல் மாற்றம் பல்வேறு நட்சத்திர நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படமானது வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



