AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிரித்விராஜ் சுகுமாரின் டாய்ரா படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

Daayra movie trailer release update | நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் டாய்ரா. இந்தி மொழியில் உருவாகி உள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது என்று பிரித்விராஜ் சுகுமாரன் தெரிவித்து உள்ளார்.

பிரித்விராஜ் சுகுமாரின் டாய்ரா படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ
டாய்ராImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Aug 2026 14:48 PM IST

மலையாள சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன். இவர் மலையாள சினிமாவில் நாயகனாக மட்டும் இன்றி தொடர்ந்து இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் மலையாள சினிமாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான படம் கலிஃபா. இந்தப் படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் தொடர்ந்து மலையாள சினிமாவில் அதிக அளவில் பணியாற்றி வந்தாலும் பான் இந்திய மொழிகளிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் அடுத்ததாக இந்தி சினிமாவில் வெளியாக உள்ள திரைப்படம் டாய்ரா.

இந்தப் படத்தை இயக்குநர் மேக்னா குல்சார் எழுதி இயக்கி உள்ளார். முன்னதாக இயக்குநர் மேக்னா குல்சார் இயக்கத்தில் இந்தி சினிமாவில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த டாய்ரா படமும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரித்விராஜ் சுகுமாரின் டாய்ரா படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது?

நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் இந்த டாய்ரா படத்தில் நாயகனாக நடித்து உள்ள நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.  அதன்படி நடிகை கரீனா கபூர் கான் நாயகியாக இந்தப் படத்தில் நடித்து உள்ளார். மேலும் இந்தப் படம் வருகின்ற 18-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் வருகின்ற 31-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு வெளியாக உள்ளதாக நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… மச்சான் பேரு மதுர நீ நின்னு பாரு எதிர – 22 ஆண்டுகளைக் கடந்தது தளபதி விஜயின் மதுர படம்… கொண்டாடும் ரசிகர்கள்

நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… டாக்ஸிக் பட இயக்குநருடன் நயன்தாரா நடித்திருக்கிறாரா? அட இந்த படமா?

Follow Us