AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இறுதியாக வெய்டிங் இஸ் ஓவர்… தொடங்கியது ஒன்ஸ்மோர் படத்தின் டிக்கெட் புக்கிங்!

Once More Movie Ticket Booking Open | நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஒன்ஸ் மோர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் டிக்கெட் புக்கிங் தற்போது தொடங்கி உள்ளது.

இறுதியாக வெய்டிங் இஸ் ஓவர்… தொடங்கியது ஒன்ஸ்மோர் படத்தின் டிக்கெட் புக்கிங்!
ஒன்ஸ் மோர்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 26 Aug 2026 11:58 AM IST

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு நாயகனாக மட்டும் இன்றி அவ்வபோது வில்லன் கதாப்பாத்திரங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். தொடர்ந்து தென்னிந்திய மொழியில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கான் சிட்டி. டார்க் காமெடி பாணியில் உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் அடுத்தடுத்து உருவாகும் படங்களின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.

அதன்படி நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படம் ஒன்ஸ்மோர். இந்தப் படத்தில் நடிகை அதிதி சங்கர் நடிகர் அர்ஜுன் தாஸிற்கு ஜோடியாக நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படம் வருகின்ற 28-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தொடங்கியது ஒன்ஸ்மோர் படத்தின் டிக்கெட் புக்கிங்:

முன்னதாக இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்தது. மேலும் ஒன்ஸ் மோர் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் படத்தின் டிக்கெட் முன்பதிவை படக்குழு தொடங்கியுள்ளது. இது தொடர்பான அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ள நிலையில் அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… உலகம் முழுவதும் பெத்தலேக குடும்ப யூனிட் படத்தை தமிழில் வெளியிடும் படக்குழு – வைரலாகும் பதிவு

ஒன்ஸ் மோர் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… தனது படத்தையே ட்ரோல் செய்து பேசிய விக்னேஷ் சிவன் – வைரலாகும் வீடியோ

Follow Us