AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரஜினிகாந்தின் பயோகிராஃபி எந்த நிலையில் உள்ளது? சௌந்தர்யா ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்

Soundarya Rajinikanth talks about Rajinikanths autobiography | சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் அடுத்ததாக அவர் பயோகிராஃபி எழுதும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதுகுறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ரஜினிகாந்தின் பயோகிராஃபி எந்த நிலையில் உள்ளது? சௌந்தர்யா ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்
ரஜினிகாந்த் - சௌந்தர்யா ரஜினிகாந்த்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Aug 2026 13:11 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் நடிகரானதே ஒரு பெரிய கதை. கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த இவர் பஸ்ஸில் கண்டெக்டராக பணிபுரிந்துள்ளார். அப்போது இவரது ஸ்டைலைப் பார்த்த இயக்குநர் பாலசந்தர் படத்தில் நடிக்கிறாராய என்று அவரை தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்து அறிமுகம் செய்து வைத்தார். ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் இடையேதான் சினிமாவில் போட்டி என்று ரசிகர்கள் கூறி வரும் நிலையில் கமல் ஹாசன் நாயகனாக நடித்தப் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடிகராக தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார் நடிகர் ரஜினிகாந்த். தொடர்ந்து சின்ன சின்ன வேடங்களில் நடித்த இவர் பிறகு வில்லன் கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்கத் தொடங்கினார்.

தொடர்ந்து வில்லனாக நடிக்கும் போதே தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ரஜினிகாந்த் பிறகு படங்களில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். மேலும் கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் படங்கள் இடையே போட்டியும் நிலவத் தொடங்கியது. தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது பயோகிராஃபியை எழுதி வருகிறார். அதுகுறித்து அவரது இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

என் தந்தை தனது சுயசரிதையை எழுதி வருகிறார். அந்தச் செயல்பாட்டில் நானும் நெருக்கமாகப் பங்கேற்று வருகிறேன். அது வெளியாவதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்தப் புத்தகம் வடிவம் பெற்று வருவதைப் பார்க்கும்போது, ​​மக்கள் பல ஆண்டுகளாக வாசிக்கக்கூடிய, மீண்டும் மீண்டும் எடுத்துப் பார்க்கக்கூடிய மற்றும் அதிலிருந்து உத்வேகம் பெறக்கூடிய ஒரு அரிய படைப்பாக அது அமையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

ரஜினிகாந்தின் பயோகிராஃபி எந்த நிலையில் உள்ளது?

என்னைப் பொறுத்தவரை, பரமஹம்ச யோகானந்தரின் ‘Autobiography of a Yogi’ (ஒரு யோகியின் சுயசரிதை) அத்தகையதொரு புத்தகமாகும். என் தந்தையின் சுயசரிதையும் அத்தகையதொரு நீடித்த முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கும் என்று நான் நம்புகிறேன். ஏனெனில், அவருடைய வாழ்க்கைப்பயணம் உண்மையிலேயே அசாதாரணமான ஒன்றாகும்.

சரியான தருணத்தில், அவருடைய வாழ்க்கை ஒரு திரைப்படமாக உருவாக்கப்படும்போது, ​​அது எனது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் நான் மேற்கொள்ளக்கூடிய மிகச் சிறப்பான திட்டங்களில் ஒன்றாக அமையும் என்று சௌந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Kiara Advani: தெலுங்கு ரசிகர்களைப் போல் வேறு ரசிகர்கள் இல்லை – நெகிழ்ச்சியாக பேசிய கியாரா அத்வானி!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… சர்தார் படத்திற்கு அவர் கொடுத்த பாராட்டு… நெகிழ்ச்சியாக பேசிய இயக்குநர்

Follow Us