சர்தார் படத்திற்கு அவர் கொடுத்த பாராட்டு… நெகிழ்ச்சியாக பேசிய இயக்குநர்
PS Mithran talks about Rajinikanth | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் பி.எஸ்.மித்திரன். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் ரஜினிகாந்த் சர்தார் படம் வெளியான போது தன்னை பாராட்டியது குறித்து வெளிப்படையாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் பி.எஸ்.மித்திரன். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இவர் கடந்த 2018- ஆண்டு வெளியான இரும்புத் திறை என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ஹீரோ என்ற படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் பல அறிவியல் சார்ந்த விசயங்களை இயக்குநர் காட்டி இருந்தாலும் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாதது படக்குழுவினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியது. இந்தப் படத்தை தொடர்ந்து வெற்றியைக் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு பி.எஸ்.மித்திரன் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு வெளியான டைகர் படமும் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. இந்த நிலையில் பி.எஸ்.மித்திரனுக்கு வெற்றியைக் கொடுத்தப் படம் சர்தார். கடந்த 2022-ம் ஆண்டு நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தினை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் தற்போது திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்து.




இந்த நிலையில் சமீபத்தில் இயக்குநர் பி.எஸ்.மித்திரன் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட போது அவரிடம் சர்தார் படத்திற்காக கிடைத்த பாராட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. சர்தார் படத்திற்குக் கிடைத்த பாராட்டுகளைப் பற்றி நினைக்கும்போது, என் நினைவுக்கு முதலில் வருவது ரஜினிகாந்த் சாரிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்புதான். அவர் உடனடியாக என்னை அழைத்து சுமார் 45 வினாடிகள் பேசினார். “கண்ணா, நான் அந்தப் படத்தைப் பார்த்தேன். அது மிகவும் நன்றாக இருக்கிறது. வீட்டில் உள்ள அனைவரிடமும் பிளாஸ்டிக் பாட்டில்கள் அனைத்தையும் தூக்கி எறியுமாறு சொல்லிவிட்டேன். படத்தை மிக அற்புதமாக உருவாக்கியிருக்கிறீர்கள்,” என்று அவர் கூறினார். பிறகு, “சரி, நன்றி,” என்று மட்டும் சொல்லிவிட்டு அழைப்பை முடித்துக்கொண்டார். அதற்கு நான், “நன்றி சார்,” என்று பதிலளித்தேன் என்று தெரிவித்து இருந்தார்.
Also Read… Dorothy: கல்யாண விருந்து.. இளையராஜா இசையில் வெளியானது டோரதி பட ஃபர்ஸ்ட் சிங்கிள்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Question: When #Sardar was released, did you receive any calls from anyone appreciating the film?#PSMithran: When I think about the appreciation Sardar received, the first thing that comes to my mind is a phone call from #Rajinikanth‘s Sir. He immediately called me and spoke… pic.twitter.com/oJXQrSWxZX
— Movie Tamil (@_MovieTamil) August 22, 2026
Also Read… இணையாத காதல்.. மீண்டும் ஒரு வாய்ப்பு.. வெளியானது அர்ஜுன் தாஸின் ஒன்ஸ் மோர் படத்தின் ட்ரெய்லர்!