Nayanthara: நீங்கள் பழைய நயன்தாராவைக் காணலாம்.. ஹாய் படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து நயன்தாரா சொன்ன விஷயம்!
Nayanthara About Hi Movie: தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நாயகியாக இருந்துவருபவர் நயன்தாரா. இவரின் நடிப்பில் தமிழில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பின், திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம்தான் ஹாய். சமீபத்தில் ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நயன்தாரா, அதில் ஹாய் படத்தில் தனது கதாபாத்திரம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து பகிர்ந்துள்ளார்.
நடிகை நயன்தாரா (Nayanthara) தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகியாக இருந்துவருகிறார். தமிழில் 2005ம் ஆண்டில் வெளியான ஐயா (Aiyya) என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக நுழைந்து, தற்போது பான் இந்திய சினிமாவிலே பிரபலமான நாயகியாக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் எக்கச்சக்க படங்களும் வெளியாகியுள்ளது. இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் திரையரங்குகளில் படங்கள் வெளியாகி கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாகிறது. அந்த வகையில் 2026ம் ஆண்டில் வெளியாக தயாராகியுள்ள திரைப்படம்தான் ஹாய் (Hi). இதை இயக்குநர் விஷ்ணு எடவன் (Vishnu Edavan) இயக்க, நயன்தாரா தனது சொந்த தயாரிப்பில் உருவாக்கியுள்ளார். மேலும் இதில் நயன்தாரா லீட் நாயகியாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகர் கவின் ராஜ் (Kavin Raj) நடித்துள்ளார்.
படமானது பீல் குட் காதல் கதையில் உருவாகியுள்ள நிலையில், 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றிருந்த நிலையில், அதில் தனது கதாபாத்திரம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து நயன்தாரா பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: ஓரம் போ படத்தின் நாயகியாக அந்த நடிகைதான் முதல் சாய்ஸ் – இயக்குநர்கள் ஓபன் டாக்
ஹாய் படத்தில் தனது கதாபாத்திரம் எவ்வாறு இருக்கும் என்பது பற்றி நயன்தாரா:
அந்த நிகழ்ச்சியில் பேசிய நயன்தாரா, “நீண்ட காலமாக, நான் தீவிரமான மற்றும் அதிரடி வேடங்களில் நடித்து வருகிறேன். ஆனால் இது மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும், இந்தப் படத்தில் நீங்கள் பழைய நயன்தாராவைக் காணலாம். அனைவரும் இதை விரும்பி ரசிப்பார்கள்” என அதில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மாஸான ஒரு ஸ்பை திரில்லர்.. சர்தார் 2 படத்தின் கதைக்களம் பற்றி தெரிவித்த இயக்குநர் பி.எஸ்.மித்ரன்!
ஹாய் படத்தில் தனது வேடம் பற்றி நயன்தாரா பேசிய வீடியோ பதிவு:
#Nayanthara in full force promoting her 2 Films #HiMovie & #Toxic Back to Back !!#Nayanthara about her character in Hi movie:
“Since long, I’ve been doing serious & Action roles. It will be very refreshing💫, you can witness the vintage Nayanthara in this film♥️. Everyone will… pic.twitter.com/XcdCOMvHFG— AmuthaBharathi (@CinemaWithAB) August 20, 2026
ஹாய் திரைப்படமானது சிறப்பான காதல் மற்றும் பேமிலி பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது. இதில் நயன்தாரா மற்றும் கவின் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இதில் மறைந்த இயக்குநர் கே.பாக்கியராஜும் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் ராதிகா சரத்குமார், பிரபு, பூர்ணிமா போன்ற நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது