Nayanthara: கவினை ஒரு சூப்பர் ஸ்டாராகப் பார்க்க விரும்புகிறேன் – நயன்தாரா!
Nayanthara Praises Kavin : தென்னிந்திய சினிமா வட்டாரங்களில் மக்கள் மத்தியில் லேடி சூப்பர்ஸ்டாராக மிகவும் பிரபலமானவர் நயன்தாரா. இவர் கவினுக்கு ஜோடியாக ஹாய் என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ள நிலையில், அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கவின் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.
சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாகவே நடித்துவருபவர் நயன்தாரா (Nayanthara). இவரை அவரின் ரசிகர்கள் லேடி சூப்பர்ஸ்டார் (Lady Superstar) என்றும் அன்போடு அழைத்துவருகிறார்கள். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழி படங்களிலுமே நாயகியாக நடித்துவருகிறார். தமிழில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பின் இவரின் நடிப்போல் திரையரங்குகளில் வெளியாகவுள்ள படம்தான் ஹாய் (Hi). இயக்குநர் விஷ்ணு எடவன் (Vishnu Edavan) இயக்கத்தில் உருவான இப்படத்தை நயன்தாராவின் ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகிறது.
அதை முன்னிட்டு நயன்தாரா தனது படத்திற்கான புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுவருகிறார். அண்மையில் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில், நடிகர் கவினுடன் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய நயன்தாரா, நடிகர் கவினின் (Kavin) நடிப்பு மற்றும் சினிமா உத்வேகம் குறித்து பேசியுள்ளார்.




இதையும் படிங்க: பணம், புகழை விட ரசிகர்களின் அன்புதான் எல்லாமே – ஸ்ரீலீலா பேச்சு!
நடிகர் கவின் குறித்து புகழ்ந்து பேசிய நடிகை நயன்தாரா:
அந்த நிகழ்ச்சியில் பேசிய நயன்தாரா, “கவின் மிக மிக இனிமையான பையன். மிகவும் திறமையான நபர். வெறும் 7& 8 படங்களில் ஒரு நடிகரிடம் இவ்வளவு மெச்சூரிட்டியை நான் பார்த்ததில்லை. அது ரொம்ப பெரிய விஷயம். படத்தில் ஒரு வசனத்தை எப்படி சொல்லவேண்டும், எவ்வாறு அது அமையவேண்டும் என்ற மெச்சூரிட்டி அவருக்கு இருக்கு.
இதையும் படிங்க: தள்ளிப்போகிறதா ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ்? அப்டேட் என்ன
அவர் அவருக்குள்ளே ஒரு உதவி இயக்குநரை வச்சிருக்காரு. 6& 7 படங்களில் அவரின் நடிப்பு மற்றும் அவரின் கதை தேர்வு மிகவும் பாராட்டத்தக்கது. குட் ஜாப் ப்ரோ. நான் அவரை ஒரு சூப்பர் ஸ்டாராகப் பார்க்க விரும்புகிறேன்” என அதில் நயன்தாரா பேசியிருந்தார்.
நடிகர் கவின் குறித்து நயன்தாரா பேசியது தொடர்பான எக்ஸ் வீடியோ பதிவு:
Kavin’s pic appears on screen ~ the crowd roars #Kavin: Dei Neenga na set panna aalu kuda ilayae da😃#Nayanthara: Kavin is a very sweet boy. The kind of film he is choosing in 6-7 films & performance is highly commendable👏. Good job bro. I want to see him as SUPERSTAR🌟. I…
— AmuthaBharathi (@CinemaWithAB) August 17, 2026
நடிகர் கவின் மற்றும் நயன்தாரா நடித்துள்ள ஹாய் படமானது, ஒரு வித்தியாசமான காதல் கதையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ள நிலையில், பாடல்களும் சிறப்பாக வந்துள்ளது. மேலும் இப்படம் வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், இதன் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.