AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நான் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாததற்கு இதுதான் காரணம் – நடிகை நயன்தாரா ஓபன் டாக்

Nayanthara Speech Viral On Social Media | மலையாள சினிமாவில் நடிகையாம அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் சமீபத்தில் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாதது குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நான் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாததற்கு இதுதான் காரணம் – நடிகை நயன்தாரா ஓபன் டாக்
நயன்தாராImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Aug 2026 11:52 AM IST

கேரளாவில் பிறந்து வளர்ந்த நடிகை நயன்தாரா முதன் முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பணியை செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து மலையாள சினிமாவில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார் நடிகை நயன்தாரா. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் 2005-ம் ஆண்டு வெளியான ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நடிகையாக அறிமுகம் ஆனார் நயன்தாரா. இவர் மலையாள சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆகி இருந்தாலும் அதிக அளவில் தமிழ் மொழியிலேயே படங்களில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் மொழியில் இயக்குநராக உள்ள விக்னேஷ் சிவனை காதல் திருமணம் செய்து தமிழ் நாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார் நடிகை நயன்தாரா. இவர் மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடா மற்றும் இந்தி மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார்.

தொடர்ந்த் பான் இந்திய மொழிகளில் நாயகியாக வலம் வரும் நடிகை நயன்தாரா தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தொடர்ந்து படங்களை தயாரித்தும் வருகிறார். நடிப்பு தயாரிப்பு என பிசியாக வலம் வரும் நடிகை நயன்தாரா அவரது படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது இல்லை என்று அவர் மீது விமர்சனங்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றது. இந்த நிலையில் அது குறித்து நடிகை நயன்தாரா விளக்கம் அளித்தது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நான் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாததற்கு இதுதான் காரணம்:

நடிகை நயன்தாரா பேசியதாவது, படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள எனக்கு விருப்பமில்லை என்பதல்ல. அதில் எனக்கு அவ்வளவாகத் திறமை இல்லாததால்தான் நான் அவற்றிலிருந்து விலகி இருக்கிறேன். ஆனால், இந்த டாக்ஸிக் நிகழ்ச்சி பல காரணங்களுக்காக மிகவும் சிறப்பானது. முக்கியமாக, ‘யாஷ்’ (Yash) ஒரு அழைப்பு விடுத்தது மட்டுமே நான் இதில் கலந்துகொள்ளப் போதுமானதாக இருந்தது. அதோடு, இவர்களிடம் உள்ள தொலைநோக்குப் பார்வையும் இந்த நிகழ்ச்சியை மிகவும் சிறப்பானதாக மாற்றுகிறது என்று டாக்ஸிக் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகை நயன்தாரா பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… இன்று கோலாகலமாக நடைபெறும் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி

இணையத்தில் வைரலாகும் நயன்தாரா பேச்சு:

Also Read… ஓணம் ரேசில் இணைந்தது நிவின் பாலியின் பெத்தலேக குடும்ப யூனிட் – வைரலாகும் பதிவு

Follow Us