AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பரப்புரை.. என்ன பேசப்போகிறார்.. எகிரும் எதிர்பார்ப்பு.. 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி!

TVK Leader Vijay Campaigns : மதுராந்தகம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் நாளை பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதில், அவர் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது .

மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பரப்புரை.. என்ன பேசப்போகிறார்.. எகிரும் எதிர்பார்ப்பு.. 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி!
முதல்வர் விஜய்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 24 Sep 2026 21:07 PM IST

தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில், அந்த கட்சியின் வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதல்வர் ஜோசப் விஜய் நாளை வெள்ளிக்கிழமை ( செப்டம்பர் 25- ஆம் தேதி) சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே பிற்பகல் 3 மணி அளவில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.  இதற்காக அந்தப் பகுதியில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, முதல்வர் ஜோசப் விஜய் பிரச்சார வாகனத்தின் மீது நின்றவாறு பேச உள்ளார். இதனிடையே, தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் பிரச்சாரம் மேற்கொள்ள சென்ற இடங்களில் சிலர் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அவருக்கு வெற்றி வாய்ப்பு குறைந்ததாக நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர். இதனால், முதல்வர் விஜய் மேற்கொள்ள இருக்கும் பிரச்சாரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதிலும், அவர் என்ன பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி

இந்த நிகழ்ச்சியில் போலீசாரின் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில், அனுமதி பெற்றவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். இதற்காக கியூ ஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவு சீட்டுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சுமார் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை தவிர வேறு யாரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி கிடையாது. இந்த நிகழ்ச்சிகள் பங்கேற்க வரும் நபர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட க்யூ ஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவுச்சீட்டை உடன் கொண்டு வர வேண்டும். அதனை போலீசார் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதி அளிக்கப்படுவார்கள்.

மேலும் படிக்க: ஜெம் வீரமணி பாலியல் வழக்கை திசை திருப்பும் முயற்சியில் சிலர்.. காங்கிரஸ் பட்டியலின தலைவர் பகீர் வாக்குமூலம்!

இவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க வரவேண்டாம்

பாதுகாப்பு கருதி சிறுவர்கள், சிறுமிகள், கர்ப்பிணி பெண்கள், மூத்த குடிமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம். அவர்களுக்கு கியூ ஆர் குறியீட்டுடன் கூடிய அனுமதி சீட்டுகள் வழங்கப்படவில்லை. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தவெக தலைமை தரப்பில் முக்கிய அறிவுறுத்தல்

அனுமதி சீட்டு இல்லாத யாரும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த நிகழ்ச்சியை அனைவரும் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் நேரலைகள் மூலமாக கண்டு கொள்ளலாம் என்று தமிழக வெற்றி கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: நிர்வாண கோலத்தில் ஜெம் வீரமணி? சிறுமியுடன் உல்லாசமாக இருந்த ரகசிய காட்சிகள் கசிவு.. வழக்கில் அடுத்தக்கட்ட பரபரப்பு!

Follow Us