11: 11… என் வாழ்வில் ஒருமுறை… காவியா மாறனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த அனிருத்!
Anirudh Weds Kavya Maran: தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருந்துவருபவர் அனிருத் ரவிச்சந்தர். இவர் சன் ரைஸஸ் ஆப் ஹைதராபாத் அணியின் மேலாளர் காவியா மாறனை காதலித்து வந்த நிலையில், இவர்கள் இருவரின் திருமணம் இன்று (11/11/2026) கிரீஸில் நடந்துள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை அனிருத் பகிர்ந்துள்ளார்.
கோலிவுட் சினிமாவின் மூலம் இசையமைப்பாளராக நுழைந்து, தென்னிந்திய முழுவதும் பிரபலமான இசையமைப்பாளராக இருந்துவருபவர் அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander). இவர் சன் ரைஸஸ் ஆப் ஹைதராபாத் அணியின் மேலாளர் காவியா மாறனை (Kavya Maran) நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், இவர்கள் இருவரின் திருமணம் இன்று (11/11/2026) கிரீஸில் நடந்துள்ளது. அனிருத் தென்னிந்திய சினிமாவில் பல்வேறு உச்ச நடிகர்களின் படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இவர் தமிழக முதல்வர் விஜய் (CM Vijay) முதல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) வரை பல்வேறு உச்ச நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரின் மகளும், சன் ரைஸஸ் ஹைதராபாத் அணியின் மேலாளருமான காவியா மாறன் என்பவரை பல ஆண்டுகளாக டேட் செய்துவந்தார்.
இவர்கள் இருவருமே வெளிநாடுகளில் ஒன்றாக சுற்றித்திருவது போன்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவந்தது. அந்த விதத்தில் இன்று தங்களின் குடும்பம் மற்றும் நண்பர்கள் மத்தியில் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. இது தொடர்பான இன்ஸ்டாகிராம் பதிவை அனிருத் வெளியிட்டுள்ளார்.




இதையும் படிங்க: சேவ் தி டேட்.. விஜய் சேதுபதி – சாய் பல்லவியின் இஞ்சி வெல்லம் படத்தின் ரிலீஸ் எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தனது திருமணம் தொடர்பான இன்ஸ்டாகிராம் போட்டோஷூட்டை பகிர்ந்த அனிருத் ரவிச்சந்தர்:
View this post on Instagram
கிரீஸில் நடந்த அனிருத் திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள்:
இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவியா மாறனின் திருமணம் கிரீஸ் என்றார் நாட்டில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. இந்த திருமணமானது தீவுகள் மற்றும் கடற்கரை மத்தியில் மிக பிரம்மாண்டமாக நடந்துள்ளது. கிரீஸ் நாட்டில் உணவு, கடற்கரை திருமணம் போன்றவை மிகவும் சிறப்பாக நடைபெறும் அந்த விதத்தில் அனிருத் மற்றும் காவியா மாறனின் திருமணமும் மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தின் கலாநிதிமாறன் குடும்பம் மற்றும் அனிருத்தின் குடும்பம் கலந்துகொண்டுள்ளார்கள்.
இதையும் படிங்க: முரட்டு வசூல்… 5 நாட்களில் சூர்யாவின் சீன் திரைப்படத்தின் உலகளாவிய கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?
மேலும் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சௌந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர மற்றும் அரசியல் பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்துகொண்டுள்ளனர். இவர்களின் திருமணம் இன்று சிறப்பாக நடந்த நிலையில், சென்னையில் 2026 நவம்பர் 21ம் தேதியில் திருமண வரவேற்பு சிறப்பாக நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரவேற்ப்பில் தமிழக முதல்வர் விஜய் முதல் பல்வேறு சினிமா பிரபலங்களும் கலந்துகொள்வதாக கூறப்படுகிறது. இதில் பாலிவுட், தெலுங்கு போன்ற மொழி பிரபலங்களும் கலந்துகொள்கிறார்களாம்.