AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சீன் படத்தை வெகுவாகப் பாராட்டிய மகேஷ் பாபு… நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா – வைரலாகும் எக்ஸ் தள பதிவு!

Actor Suriya thanks actor Mahesh Babu | நடிகர் மகேஷ் பாபு சூர்யாவின் நடிப்பில் வெளியான சீன் படத்தைப் பார்த்துவிட்டு வெகுவாகப் பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்தப் பதிவிற்கு நடிகர் சூர்யா தற்போது நன்றி தெரிவித்து உள்ளார்.

சீன் படத்தை வெகுவாகப் பாராட்டிய மகேஷ் பாபு… நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா – வைரலாகும் எக்ஸ் தள பதிவு!
சூர்யா - மகேஷ் பாபுImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Nov 2026 13:32 PM IST

தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளில் இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலப் படங்கள் வரிசையாக திரையரங்குகளில் வெளியானது. அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவின் (Actor Suriya) நடிப்பில் உருவான சீன் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவான மூக்குத்தி அம்மன் 2 என இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியானது. இந்த இரண்டு படங்களில் மூக்குத்தி அம்மன் 2 படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்று வருகின்றது. மேலும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான சீன் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சீன் படத்தை இயக்குநர் ஜித்து மாதவன் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.

மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான மூன்று நாட்களிலேயே ரூபாய் 145 கோடிகள் வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் மகேஷ் பாபு தனது கருத்துகளை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்தத் திரைப்படம் பார்க்க மிகவும் ரம்மியமாகவும், சுவாரஸ்யமாகவும், புத்திசாலித்தனமாகவும், மிகுந்த மகிழ்ச்சி தருவதாகவும் உள்ளது. ‘இன்பராஜ்’ கதாபாத்திரத்தில் சூர்யா மிகச் சிறப்பாக நடித்துள்ளார். நஸ்ரியா மற்றும் நாஸ்லென் ஆகியோரின் நடிப்பும் அபாரம். ஜித்து மாதவனின் எழுத்துத் திறன் மற்றும் நேர்த்தியான இயக்கம் என, அனைத்து அம்சங்களிலும் படம் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய திரைப்படம் என்று தெரிவித்து இருந்தார்.

சீன் படத்தை பாராட்டிய மகேஷ் பாபு… நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா:

இந்த நிலையில் நடிகர் மகேஷ் பாபுவிற்கு நன்றி தெரிவித்து நடிகர் சூர்யா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, அன்புள்ள மகேஷ் பாபு அவர்களே, உங்கள் கனிவான வார்த்தைகளுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி. எங்கள் திரைப்படத்தைப் பார்ப்பதற்கு நேரம் ஒதுக்கி, உங்கள் அன்பைப் பகிர்ந்துகொண்டது உங்கள் பெருந்தன்மையையும் கனிவையும் காட்டுகிறது. எங்கள் ஒட்டுமொத்த குழுவின் சார்பாகவும், என் சார்பாகவும், இந்த அழகான செயலுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அன்பும் மரியாதையும் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… இது சீன் தீபாவளி… வசூலில் ஹாட்ரிக் அடிக்கும் சூர்யா – வெளியானது அப்டேட்

நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… தனது அடுத்தப் படத்தின் ஊதியத்தில் முக்கிய முடிவு எடுத்துள்ள நடிகர் விஷால்? வைரலாகும் தகவல்

Follow Us