பிக்பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் வீட்டில் போதைப்பொருள் சோதனை… முதல்வர் பதிலளிக்க கோரிக்கை!
Bigg Boss Tamil 4 Balaji Murugadoss | பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் தமிழ் நாட்டு மக்களிடையே பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். இவரது வீட்டில் போதைப் பொருள் சோதனை நடைப்பெற்ற நிலையில் அதுகுறித்து அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் அவர்கள் தமிழக மக்களிடையே பரிச்சையம் ஆகிறார்களோ இல்லையோ இந்த பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் மட்டும் நிச்சயமாக தமிழக மக்களிடையே பிரபலம் ஆகிவிடுவார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்காத மக்களுக்கு கூட அந்த நபர் பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்டவர் என்று அடையாளம் காணும் அளவிற்கு அனைத்து இடங்களிலும் பிரபலமானவர்களாகவே இருப்பார்கள். இதன் காரணமாகவே வெள்ளித்திரை பிரபலங்கள் வரை பலர் இந்த பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் கடந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 4 (Bigg Boss Tamil) நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் தமிழ் நாட்டு மக்களிடையே பிரபலமானவர் நடிகர் பாலாஜி முருகதாஸ். இவர் இந்த நிகழ்ச்சியில் ஒரு மாடலாகவே எண்ட்ரி கொடுத்த நிலையில் தொடர்ந்து சினிமா வாய்ப்புகளைப் பெற்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் மக்களிடையே பிரபலமானவராக வலம் வரும் இவர் தற்போது சின்னத்திரையில் தமிழ் மொழியில் ஒளிபரப்பாகும் மாஸ்டர் செஃப் என்ற ஒரு சமையல் போட்டியிலும் கலந்துகொண்டு போட்டியிட்டு வருகிறார். அது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் பாலாஜி முருகதாஸ் வீட்டில் இன்று போதைபொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை செய்துள்ள நிலையில் அதுகுறித்து பாலாஜி முருகதாஸ் கேள்வி எழுப்பி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




பிக்பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் வீட்டில் போதைப்பொருள் சோதனை:
அந்தப் பதிவில் பாலாஜி முருகதாஸ் கூறியதாவது, யார் புகார் அளித்தது என்பதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன், முதல்வர் விஜயே! யார் புகார் கொடுத்தது, எதற்காகக் கொடுத்தது என்பதை நான் அறிய வேண்டும்! பலமுறை கேட்டும் அவர்கள் அதைச் சொல்லவில்லை. நான் ரத்தப் பரிசோதனை செய்துகொள்ளவும் தயாராக இருக்கிறேன். ஆனால், உங்கள் காவல் துறையைக் கண்டு வெட்கப்படுகிறேன்! என் வீட்டிற்கு 15 காவலர்கள் வந்தனர்; அங்கு அவர்களுக்குக் கிடைத்தது 3 பூனைகளும் ஒரு நாயும் மட்டுமே! எந்த அடிப்படையில் அவர்கள் வந்தார்கள் என்பதை நான் தெரிந்துகொள்ள வேண்டும்! தேடுதல் ஆணை (search warrant) எதுவும் இல்லை, நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதால் அவர்களே உள்ளே வர அனுமதித்தேன். ஆனால், காவல் துறையின் இந்தச் செயலுக்கு எனக்கு ஒரு விளக்கம் தேவை என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… 3 நாட்களில் ரன்பீர் கபூரின் ராமாயணா படம் எத்தனை கோடிகளை வசூல் செய்துள்ளது? வைரலாகும் தகவல்!
பாலாஜி முருகதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
I just want to know who gave the complaint
@actorvijay i want to know who gave the complaint and for what ! I asked them n number of times they didn’t disclose .
I’m up for blood test. But shame on ur police department ! 15 police came to my house all they found is 3 cats and one dog ! But i wanna know on what basis they came!
There’s no search warrant since I’m clean i invited them home. But i need an explanation for this act of police.— Balaji Murugadoss (@OfficialBalaji) November 9, 2026
Also Read… கென் கருணாஸின் அடுத்த பட இயக்குநர் இவர்தானா? வைரலாகும் தகவல்