AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

விஜய் தேவரகொண்டாவின் ரணபாலி படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியானது அப்டேட்

Ranabaali Movie OTT Release Update | நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் ரணபாலி. இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பித்தக்கது.

விஜய் தேவரகொண்டாவின் ரணபாலி படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியானது அப்டேட்
ரணபாலிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Nov 2026 12:08 PM IST

தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா (Vijay Devarakonda). இவர் தெலுங்கு சினிமாவில் நாயகனாக மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும் வலம் வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் தெலுங்கு சினிமாவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கியவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. அதனைத் தொடர்ந்து தொடர்ந்து அடுத்தடுத்து வரிசையாக தெலுங்கு சினிமாவில் படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் இறுதியாக தெலுங்கு சினிமாவில் வெளியான படம் ரணபாலி. இந்தப் படம் கடந்த அக்டோபர் மாதம் 16-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் ராகுல் சாங்க்ரித்யன் எழுதி இயக்கிய இந்த ரணபாலி படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து இருந்தார். இவர்கள் இருவரும் சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தில் இணைந்து நடித்து உள்ளனர். மேலும் இவர்களின் திருமணத்திற்கு பிறகு இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானதால படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விஜய் தேவரகொண்டாவின் ரணபாலி படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

பீரியட் ஆக்‌ஷன் ட்ராமா பாணியில் உருவான இந்த ரணபாலி படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தின் ஓடிடி வெளியீடு எப்போது இருக்கும் என்பதை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது அந்த செய்தி வெளியாகி மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி ரணபாலி படம் வருகின்ற 13-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… பிக்பாஸில் ரேங்கிங் டாஸ்க் குறித்து போட்டியாளர்களிடையே கேள்வி எழுப்பும் விஜய் சேதுபதி – வைரலாகும் வீடியோ

நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… இரண்டு நாட்களில் சூர்யாவின் சீன் படத்தின் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? வைரலாகும் தகவல்!

Follow Us