AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி படத்தின் சென்சார் அப்டேட் என்ன தெரியுமா? வைரலாகும் பதிவு!

Appa Kutty Movie Censor Update Here | நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படம் அப்பா குட்டி. இந்தப் படத்திற்கு தணிக்கை குழு என்ன சான்றிதழ் வழங்கியது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி படத்தின் சென்சார் அப்டேட் என்ன தெரியுமா? வைரலாகும் பதிவு!
அப்பா குட்டிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 07 Nov 2026 15:40 PM IST

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய் ஆண்டனி (Vijay Antony). இவர் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனதில் இருந்து தொடர்ந்து ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பை பெற்று வருகின்றார். மேலும் இவரது இசையில் வெளியான பாடல்கள் ரசிகர்களிடையே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிப்பு மீது இருந்த ஆர்வம் காரணமாக தொடர்ந்து படங்களில் நடித்து வந்த விஜய் ஆண்டனி பிறகு நாயகனாக நடிக்கத் தொடங்கினார். இசையமைப்பாளராக விஜய் ஆண்டனியை கொண்டாடிய ரசிகர்கள் தற்போது நாயகனாகவும் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். இதன் காரணமாகவே நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

அது மட்டும் இன்றி விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் அவரே தயாரித்து வருகிறார். மேலும் அந்தப் படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படம் அப்பா குட்டி. இந்தப் படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது.

விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி படத்தின் சென்சார் அப்டேட் என்ன?

அந்த வகையில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் அப்பா குட்டி என்ற படம் 20-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. மேலும் படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இந்தப் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக நடிகர் விஜய் ஆண்டனி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… பிக்பாஸில் டாஸ்க்கைவிட சாப்பாட்டு சண்டைதான் அதிகமா இருக்கு… இப்போ யார் சண்டை போட்டுகிட்டா தெரியுமா? வைரலாகும் வீடியோ!

நடிகர் விஜய் ஆண்டனி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Ramayana Part 1 Review: ராமாயணம் படம் எப்படி இருக்கு? ரசிகர்களை கவர்ந்ததா? ப்ளஸ் மைனஸ் இவைதான்!

Follow Us