விக்னேஷ் சிவனின் அடுத்தப் படம் எப்படி இருக்கும் தெரியுமா? வைரலாகும் தகவல்
Director Vignesh Shivan Next Movie Update | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் விக்னேஷ் சிவன். இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாக உள்ள படம் தொடர்பான அப்டேட்கள் தற்போது சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் விக்னேஷ் சிவன் (Director Vignesh Shivan). இவர் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தாலும் தொடர்ந்து நடிகராகவும், தயாரிப்பாளராகவும், பாடலாசிரியராகவும் வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் கடந்த 2012-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான போடா போடி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். நடிகர் சிலம்பரசன் நாயகனாகவும் நடிகை வரலட்சுமி சரத்குமார் நாயகியாக நடித்து இருந்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து படங்களை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து நானும் ரௌடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி ஆகியப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
அதன்படி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்தப் படம் திரையரங்குகளில் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகி ஆனால் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக உள்ள படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி உள்ளது.




விக்னேஷ் சிவனின் அடுத்தப் படம் எப்படி இருக்கும் தெரியுமா?
விக்னேஷ் சிவன் தனது அடுத்த திரைப்படத்தை நானும் ரௌடிதான் பாணியில், ஒரு காதல் கலந்த நகைச்சுவைப் படமாக தனது அடுத்தப் படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார். இதில் அரவிந்த் சாமி மற்றும் பரத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சமீபத்தில் கதையைக் கேட்ட அரவிந்த் சாமி, அது மிகவும் பிடித்துப்போனதாகக் கூறப்படுகிறது. இதில் அவர் இதுவரை பார்த்திராத ஒரு சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்காக அவர் ஊதியத்திற்குப் பதிலாக, படத்தின் லாபத்தில் பங்கு பெறும் அடிப்படையில் ஒப்பந்தமாகியுள்ளார்.
இயக்குநர் விக்னேஷ் சிவனும் லாபத்தில் பங்கு பெறும் முறையிலேயே இந்தப் படத்தில் பணியாற்றுகிறார். இப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் தொடக்க நிகழ்வு மிகவும் அமைதியாக நடைபெற்று முடிந்துவிட்டதாகத் தெரிகிறது. கதாநாயகி கதாபாத்திரத்திற்காக நஸ்ரியாவை அணுக படக்குழு திட்டமிட்டுள்ளது.
Also Read… Arjun Das: இன்வஸ்டிகேஷன் க்ரைம் திரில்லர்.. அர்ஜுன்தாஸின் ஜான் டே படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#VigneshShivan is planning his next directorial in the style of #NaanumRowdyDhaan (#NRD), a rom-com comedy with Finally #Bharath and #ArvindSwamy duo.
#ArvindSwamy recently heard the story narration and is said to have totally enjoyed it. It’s a never-seen-before fun character, and the actor has agreed to come on board on a profit-sharing basis instead of a salary.
#VigneshShivan is also working on the film on a profit-sharing basis, with the movie being produced by Passion Studios.
The movie’s office pooja is also said to have been completed silently.
The team is planning to approach #Nazriya for the heroine character.
Source – Valai Pechu
— Movies Singapore (@MoviesSingapore) November 3, 2026
Also Read… டிடிஃஎப் வாசனுக்கு கிடைக்கும் அங்கீகாரம்.. கூட்டு சேர்ந்து பேசிய அவினாஷ் – ஜேசன்!