AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சாப்பாட்டுக்கு அளவு முக்கியம்.. பிக் பாஸில் சாப்பாட்டுக்காக மீண்டும் எழுந்த பிரச்சனை – ப்ரோமோ இதோ!

Bigg Boss Season 10: தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் சிறப்பாக வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியானது 9வது வாரத்தின் ஆரம்பத்தில் உள்ள நிலையில், தற்போதுவரை சிறப்பாக உள்ளது. அந்த விதத்தில் இன்று (02/11/2026) வெளியான 3வது ப்ரோமோவில் சாப்பாட்டுக்காக ஜேசன், மற்ற போட்டியாளர்களுடன் பிரச்சனை செய்வதுபோல காட்டப்பட்டுள்ளது.

சாப்பாட்டுக்கு அளவு முக்கியம்.. பிக் பாஸில் சாப்பாட்டுக்காக மீண்டும் எழுந்த பிரச்சனை – ப்ரோமோ இதோ!
பிக் பாஸ் ப்ரோமோImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 02 Nov 2026 16:27 PM IST

பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது கடந்த 2026 செப்டம்பர் 6ம் தேதி முதல் தொடங்கிய நிலையில், 9வது வாரத்தில் உள்ளது. மொத்தம் 19 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது 14 போட்டியாளர்கள் மீதம் உள்ளனர். கடந்த வாரத்தில் வாக்கு எண்ணிக்கையின்படி கரீஷ்மா வெளியேற்றப்பட்டிருந்தார். விஜய் சேதுபதி 2 வாரத்திற்கு பின் வந்திருந்த நிலையில், கேள்விகள் ஒவ்வொன்றும் அனல் பறந்தது. அந்த விதத்தில் தற்போது இந்த நிகழ்ச்சியானது 14 போட்டியாளர்களுடன் 9வது வாரத்தில் நுழைந்துள்ளது.

இந்த வாரத்தின் தொடக்கத்திலே ஜேசன் (Jason) மற்றும் முனியம்மாள் (Muniyammal) இருவருக்கும் பிரச்னையுடன் ஆரம்பமான நிலையில், தற்போது சாப்பாட்டிற்காக ஜேசன் மற்ற போட்டியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதுபோன்ற ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: RC17 படத்தில் ராம் சரண் நடிக்கும் கதாபாத்திரம் இதுவா? – வைரலாகும் தகவல்!

சாப்பாட்டின் அளவுக்காக போட்டியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈட்யுப்படும் ஜேசன்:

இந்த ப்ரோமோவில், முனியம்மாள் போட்டியாளர்கள் அனைவருக்கும் சாப்பாடை பரிமாறுவதுபோல காட்டப்படுகிறது. இந்த வாரத்தில் வீட்டின் தலைவராக லக்ஷ்மி பிரியா இருக்கும் நிலையில், அவர் அதை பார்வையிட்டிருந்தார். உடனே ஜேசன் எல்லாரும் அவர் அவர்கள் தட்டை கீழே வைங்க.. எல்லாருக்குமே ஒரே அளவில் சாப்பாடு இருக்கவேண்டும் என கூறியிருந்தார். உடனே முனியம்மாள் எப்படி எல்லாருக்குமே ஒரே அளவுதான் சாப்பாடு இருக்கும் ப்ரோ என கூறியிருந்தார்.

இதையும் படிங்க: பிக் பாஸ் லக்ஸூரி பட்ஜெட் ஷாப்பிங்.. முனியம்மாளால் கலகலப்பு – வைரலாகும் ப்ரோமோ!

மேலும் உடனே அக்ஷிதாவின் தட்டில் முனியம்மாள் அதிக உணவை பகிர்ந்தார். உடனே கோபமான ஜேசன், அளவு இல்லாமல் எப்படி சாப்பாடு போடுவீங்க.. சொல்றது ஈஸி எப்படி நீங்க பண்ணிறீங்க என அதில் அவர் கூறியுள்ளார். ஆக மொத்தத்தில் இந்த வீட்டில் ஒன்னு வாக்குவாதம் வருகிறது.. இல்லையென்றால் சாப்பாட்டிற்கு பிரச்சனை வருகிறது என ரசிகர்கள் தங்களின் கருத்தை தெரிவித்துவருகிறார்கள்.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 57வது நாளின் 3வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:

தற்போது இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது 9வது வாரத்தில் உள்ள நிலையில், இந்த வாரத்தில் மொத்தம் 14 போட்டியாளர்கள் உள்ளனர். அந்த விதத்தில் இந்த வாரத்தில் நோ எவிக்ஷன் இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us