AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
161-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சேலம் நகரம்.. வரலாறும் கம்பீரமும் நிறைந்த மாநகரின் சிறப்புப் பயணம்!

161-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சேலம் நகரம்.. வரலாறும் கம்பீரமும் நிறைந்த மாநகரின் சிறப்புப் பயணம்!

Sathis S
Sathis S | Published: 01 Nov 2026 14:17 PM IST

Salem City Celebrates 161st Foundation Day: தமிழகத்தின் பழமை வாய்ந்த மலைகள் சூழ் மாநகரமான சேலம், தனது 160 ஆண்டுகளை நிறைவு செய்து இன்று 161-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பீரங்கி குண்டு வரலாறு முதல் பிரிட்டிஷ் காலத்துச் சாலைகள் மற்றும் கனிம வளம் வரை சேலத்தின் சிறப்புகள் விவரிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தின் மிகப்பழமையான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரங்களில் ஒன்றான சேலம் மாநகரம், தனது 160 ஆண்டு கால பொற்கால வரலாற்றை நிறைவு செய்து இன்று கம்பீரமாக 161-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. மலைகள் சூழ்ந்த இயற்கை எழில் கொஞ்சும் மாநகரமாக விளங்கும் சேலம், கடந்த 1866-ஆம் ஆண்டு ஒரு நகரவைத் தலை மற்றும் 17 உறுப்பினர்களுடன் அதிகாரப்பூர்வமாக நகராட்சியாக உருவெடுத்த நாளே இன்றுகூட ‘சேலம் தினமாக’க் கொண்டாடப்பட்டு வருகிறது. கால ஓட்டத்தில் படிப்படியாக வளர்ந்து கடந்த 1994-ஆம் ஆண்டு மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்ட இந்த நகரம், தற்பொழுது நவீன வசதிகளுடன் கூடிய ‘ஸ்மார்ட் சிட்டி’ (Smart City) எனப்படும் பொலிவுறு நகரமாக உருவெடுத்துள்ளது. ஆண்டுகள் பல கடந்தாலும் தனது பாரம்பரிய அடையாளங்களையும் சரித்திர முக்கியத்துவத்தையும் எவ்விதத்திலும் இழக்காமல் தனித்துவத்துடன் விளங்கும் சேலம், தமிழகத்தின் தவிர்க்க முடியாத அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

பிரிட்டிஷ் காலத்து வரலாற்றுச் சாலை:

சேலம் மாநகரத்தின் வரலாற்றில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திற்குக் மிக முக்கியப் பங்கு உண்டு; இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் மாவட்டங்களில் ஒன்றான இங்குப் பணியாற்றிய ஆங்கிலேய அதிகாரிகளின் நினைவுகள் இன்றைக்கும் உயிர்ப்புடன் உள்ளன. இங்கிலாந்து மன்னர் மூன்றாம் ஜார்ஜ் காலத்தில் சேலம் கோட்டையின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட பழமையான பீரங்கி இன்றைக்கும் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் வரலாற்றுச் சின்னமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் கால நேரத்தைத் தெரிந்துகொள்ள நண்பகல் 12 மணிக்கும் பின்னர் இரவு 8 மணிக்கும் இந்தப் பீரங்கியை வெடிக்கும் வழக்கம் இருந்ததன் அடையாளமாகவே ‘குண்டு போடும் தெரு’ என்ற பெயர் இன்றும் புழக்கத்தில் உள்ளது. மேலும், 1853 முதல் 1862 வரை கலெக்டராகப் பணியாற்றிய ஹேரி அகஸ்டஸ் பிரட்ஸ் நினைவாக ‘பிரட்ஸ் சாலை’யும், சி.டி.லாங்லி நினைவாக ‘லாங்லி சாலை’யும், லீ என்பவரின் நினைவாக ‘லீ பஜார்’ சந்தையும் அமைக்கப்பட்டு வரலாற்றின் எச்சங்களை இன்றும் தாங்கி நிற்கின்றன.

Follow Us