AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
தவறு செய்தவர்கள் அதற்கான பலனை அனுபவிப்பார்கள் – அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை!

தவறு செய்தவர்கள் அதற்கான பலனை அனுபவிப்பார்கள் – அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை!

Deepan
Deepan | Published: 30 Oct 2026 13:33 PM IST

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும், தவறு செய்தவர்கள் நிச்சயம் அதற்கான பலனை அனுபவிப்பார்கள் என்றும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜையை முன்னிட்டு, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் ரமேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் விக்னேஷ், கதிரவன் உள்ளிட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மக்கள் பணத்தைச் சுரண்டியவர்கள் மீது மட்டுமே சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை என்றும் கூறினார். மேலும், முந்தைய திமுக ஆட்சியில் உருவான சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளைச் சரிசெய்து வருவதாகவும், விலைவாசியைக் கட்டுப்படுத்த அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

Follow Us