AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
3 நாட்களாகப் பாதாள சாக்கடைக்குள் தவித்த மாடு – போராடி உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!

3 நாட்களாகப் பாதாள சாக்கடைக்குள் தவித்த மாடு – போராடி உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!

Sekaran S
Sekaran S | Published: 30 Oct 2026 07:38 AM IST

கோவை சங்கனூர் பகுதியில் திறந்துகிடந்த பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்து, கடந்த 3 நாட்களாக உணவு, தண்ணீரின்றி உயிருக்குப் போராடிய மாட்டைத் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். சங்கனூர் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவருக்குச் சொந்தமான மாடு, கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மேய்ச்சலுக்குச் சென்றபோது மாயமானது. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், திறந்திருந்த பாதாள சாக்கடைக்குள் விழுந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த கவுண்டம்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கயிறுகள் மற்றும் மீட்பு உபகரணங்களின் உதவியுடன் நீண்ட நேரம் போராடி மாட்டை உயிருடன் மீட்டனர். இதனால் மகிழ்ச்சியடைந்த உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்தனர். மேலும், திறந்துகிடக்கும் பாதாள சாக்கடைகளை மூடி விபத்துகளைத் தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow Us