AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
மூதாட்டியிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர்.. சேலத்தில் நள்ளிரவில் அதிர்ச்சி!!

மூதாட்டியிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர்.. சேலத்தில் நள்ளிரவில் அதிர்ச்சி!!

Sathis S
Sathis S | Published: 28 Oct 2026 14:08 PM IST

சேலத்தில் இரவில் நடந்து சென்ற 70 வயது மூதாட்டியிடம் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் 3 சவரன் தங்க நகையைப் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளைக் கொண்டு செவ்வாய்ப்பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம், அக்.28: தமிழகத்தின் முக்கிய மாநகரங்களில் ஒன்றான சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் குறிப்பாக முதியவர்கள் தனியாக நடமாடும் நேரங்களில் பாதுகாப்பு குறித்த கேள்விகள் அவ்வப்போது எழுந்து வருகின்றன. இரவு நேரங்களில் தனியாகச் செல்லும் பெண்களையும் முதியவர்களையும் குறிவைத்துச் சில சமூக விரோதிகள் கைவரிசை காட்டுவது அதிகரித்து வருவதுடன், இது போன்ற சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் கடுமையான அச்சத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், சேலம் மாநகரப் பகுதியில் நடந்து சென்ற 70 வயது மூதாட்டி ஒருவரை நذிகரமாகக் குறிவைத்து மர்ம நபர் ஒருவர் மூன்று சவரன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்ற துணிகரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இரவு நேரத்தில் நடந்த துணிகர சம்பவம்:

சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதிக்கு உட்பட்ட அர்த்தநாரி தெருவில் வசித்து வரும் அம்சவல்லி (70) என்ற மூதாட்டி, வழக்கம்போல நேற்றைய தினம் இரவு தனது வீட்டிற்கு வெளியே நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த அமைதியான சூழலைப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர் ஒருவர், நைசாக மூதாட்டியைப் பின்தொடர்ந்து வந்து அவர் அணிந்திருந்த மூன்று சவரன் தங்க நகையைக் குறிவைத்து திடீரெனப் பறிக்க முயன்றார். சற்றும் எதிர்பாராத இந்தத் தாக்குதலால் நிலை தடுமாறிய மூதாட்டி சாலையில் கீழே விழுந்தார்; இருப்பினும் சுதாரித்துக்கொண்ட அவர் உடனடியாக உரக்கக் கூச்சலிட்டார். மூதாட்டியின் அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஓடிவந்து கொள்ளையனைப் பிடிக்க முயன்ற போதிலும், அதற்குள் அந்த மர்ம நபர் தான் வந்த இருசக்கர வாகனத்தில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டார்.

Follow Us