AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
திருமூர்த்தி மலையில் காற்றாற்று வெள்ளம்! கோவில் காணிக்கை ரூபாய் நோட்டுகளை அயர்ன் செய்து உலர்த்திய அதிகாரிகள்

திருமூர்த்தி மலையில் காற்றாற்று வெள்ளம்! கோவில் காணிக்கை ரூபாய் நோட்டுகளை அயர்ன் செய்து உலர்த்திய அதிகாரிகள்

Sekaran S
Sekaran S | Published: 26 Oct 2026 21:26 PM IST

உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட காற்றாற்று வெள்ளம், அமணலிங்கேஸ்வரர் கோவிலைச் சூழ்ந்தது. இதனால் கோவிலில் வைக்கப்பட்டிருந்த காணிக்கைப் பணம் தண்ணீரில் நனைந்தது. வெள்ளநீர் புகுந்ததால் ஈரமான ரூபாய் நோட்டுகளைச் சேகரித்த கோவில் அதிகாரிகள், அவற்றை ஒவ்வொன்றாக அயர்ன் செய்து உலர்த்தும் பணியில் ஈடுபட்டனர். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருமூர்த்தி மலைப் பகுதியில் பெய்த கனமழையால் நீர்வரத்து அதிகரித்து, அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. கோவிலில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பும், காணிக்கைப் பணத்தை அதிகாரிகள் உலர்த்தும் காட்சிகளும் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. மழைக்காலங்களில் திருமூர்த்தி மலைக்குச் செல்லும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Follow Us