AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
கோவை செல்வ சிந்தாமணி குளத்தில் இருந்து குடியிருப்புகளுக்குள் புகுந்த மழைநீர்

கோவை செல்வ சிந்தாமணி குளத்தில் இருந்து குடியிருப்புகளுக்குள் புகுந்த மழைநீர்

Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 26 Oct 2026 15:00 PM IST

Overflowing Selva Chinthamani Lake: கோவையில் செல்வ சிந்தாமணி குளத்தில் இருந்து பெருக்கெடுத்த மழைநீருடன் கழிவுநீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர். பாம்பு, பூரான் மற்றும் சுவர்களில் மொய்க்கும் கரப்பான் பூச்சிகளால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம் நிலவுவதால் மாநகராட்சி நிர்வாகம் நிரந்தரத் தீர்வு காணக் கோரிக்கை எழுந்துள்ளது.

கோவை மாநகரப் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு நீர்நிலைகள் நிரம்பி வழியும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகள் மற்றும் நீர்நிலைகளை ஒட்டியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீரைத் திறம்பட வெளியேற்ற வேண்டிய வடிகால் அமைப்புகளில் கழிவுநீர் கலந்து குடியிருப்புப் பகுதிகளுக்குள் பாய்வதால், கோவை மாநகரின் பல பகுதிகளில் சுகாதாரச் சீர்கேடும் தீவிர நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வசசிக்கும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

குளத்தில் இருந்து குடியிருப்புகளுக்குள் பாய்ந்த கழிவுநீர்

கோவை மாநகர் செல்வபுரம் சுண்டக்காமுத்தூர் சாலையில் அமைந்துள்ள செல்வ சிந்தாமணி குளத்தில் இருந்து திடீரென அதிக அளவில் நீர் வெளியேறி, அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளது. குளத்தின் அடிப்பகுதியில் இருந்து நீர் கசிந்து வெளியேறுவதோடு, மழைநீருடன் கழிவுநீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வீடுகளிலும் சுற்றுப்புறங்களிலும் முழங்கால் அளவுக்கு நீர் தேங்கியதால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதுடன், அத்தியாவசியத் தேவைகளுக்காகக்கூட வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

Follow Us