கோவையில் துணிகரத் திருட்டு! ஷூவுக்குள் மறைத்த சாவியால் வீட்டைத் திறந்து ரூ.1.25 லட்சம் லேப்டாப் திருட்டு!
கோவை ஒத்தக்கால்மண்டபம் பகுதியில், வீட்டின் முன்புள்ள சிசிடிவி கேமராவைப் பார்த்தும் அஞ்சாமல், ஷூவுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து வீட்டைத் திறந்து ரூ.1.25 லட்சம் மதிப்பிலான மடிக்கணினியை மர்ம நபர் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வாடகைக்குத் தங்கியிருந்த வீட்டில் இந்தத் திருட்டு நடந்துள்ளது.
கோவை ஒத்தக்கால்மண்டபம் பகுதியில், வீட்டின் முன்புள்ள சிசிடிவி கேமராவைப் பார்த்தும் அஞ்சாமல், ஷூவுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து வீட்டைத் திறந்து ரூ.1.25 லட்சம் மதிப்பிலான மடிக்கணினியை மர்ம நபர் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வாடகைக்குத் தங்கியிருந்த வீட்டில் இந்தத் திருட்டு நடந்துள்ளது. ஊழியர்கள் வேலைக்குச் சென்றதை அறிந்த மர்ம நபர், காலணிகளைத் தேடி சாவியைக் கண்டுபிடித்து வீட்டிற்குள் நுழைந்து மடிக்கணினியைத் திருடிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து செட்டிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக போலீசார் மர்ம நபரைத் தேடி வருகின்றனர். அவரைப் பற்றித் தகவல் தெரிந்தவர்கள் 97875 18774 / 95003 36614 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வீட்டு வாசலில் சாவியை மறைத்து வைக்கும் பழக்கத்தைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
