கே.என்.நேரு வீட்டில் 8 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு! “சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளைத் திசைதிருப்ப ரெய்டு” – நேரு குற்றச்சாட்டு
திருச்சி தில்லை நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனை நிறைவடைந்தது. கடந்த திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரூ.634 கோடி பணி நியமன ஊழல் வழக்கு தொடர்பாக, இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய சோதனை எட்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. இதில், முக்கிய ஆவணங்கள் மற்றும் நேருவின் தம்பி மணிவண்ணனுக்குச் சொந்தமான இரண்டு மடிக்கணினிகளை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கே.என்.நேரு, பழைய வழக்கின் அடிப்படையிலேயே சோதனை நடத்தப்பட்டதாகக் கூறினார். மேலும், கொலை, கொள்ளை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளைத் திசைதிருப்பவே இந்தச் சோதனை நடத்தப்பட்டிருக்கலாம் எனக் குற்றம்சாட்டினார். நீதிமன்றத்தை அணுகி சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றும், தேர்தலை நம்பிக்கையுடன் சந்திப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.